டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா?

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் சண்டையில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தருமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்ரேல் நடத்திய தாக்குதல் .. காஸா போராளி குழு தலைவர் கொலை!

    டெல்லி: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் சண்டையில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவு தருமா என்று கேள்வி எழுந்துள்ளது. தற்போது டிவிட்டரில் இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா #indiawithisrael என்ற டேக் முழுக்க வைரலாகி வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தற்போது மீண்டும் சண்டை உச்சம் அடைந்துள்ளது. சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த சண்டை நேற்று மாலையில் இருந்து மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    நேற்று மாலையில் இருந்து காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மற்றும் சுமார் 200 ராக்கெட்டுகளை ஏவி காஸா மீதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. காஸா படையும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!மொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்!

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    பொதுவாக உலகநாடுகளுக்கு இடையில் போர் நடக்கும் போது இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தராது.இந்தியா மீது இதனால் உலக நாடுகளுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. அணி சேரா நாடாக இந்தியா எப்போதும், எந்த நாட்டின் உணர்வையும் புண்படுத்தாமல் இருந்து வருகிறது.

    அதிரடி

    அதிரடி

    ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக காஷ்மீர் விஷயத்தில் இந்தியா பல முக்கியமான நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காஷ்மீர் பிரச்சனை காரணமாக இந்தியா சீனா, மலேசியா, துருக்கி ஆகிய நாடுகளை பகைத்துக் கொண்டது.

    அமெரிக்கா உடன் நெருக்கம்

    அமெரிக்கா உடன் நெருக்கம்

    அதேபோல் இந்தியா அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாகி உள்ளது. அமெரிக்காவின் முடிவுகளுக்கு இந்தியா கட்டுப்பட்டு வருகிறது. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடையை இந்தியா மதித்தது. இதனால் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் உடன் நெருக்கம்

    இஸ்ரேல் உடன் நெருக்கம்

    இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேலில் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளி குழுக்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் மிக கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

    யாருக்கு ஆதரவு அளிக்கும்

    யாருக்கு ஆதரவு அளிக்கும்

    இஸ்ரேல் போரில், அமெரிக்கா இஸ்ரேலுக்குத்தான் ஆதரவு அளிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இஸ்ரேல் உருவாகவே அமெரிக்கா காரணம் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதேபோல் அமெரிக்காதான் ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது.

    அமெரிக்கா செல்லுமா

    அமெரிக்கா செல்லுமா

    இதனால் இந்தியா அமெரிக்காவை பின்பற்றி தற்போது நடக்கும் போரில் இஸ்ரேலை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ஆனால் இன்னொரு பக்கம் இஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா #indiawithisrael என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

    வைரல்

    வைரல்

    நேற்று இரவில் இருந்து இந்த டேக் வைரலாகி வருகிறது. டிவிட்டரில் தற்போது தேசிய அளவில் இந்த டேக் முதலிடத்தில் உள்ளது. பாஜக கட்சியினர், ஆதரவாளர்கள் பலர் இதில் டிவிட் செய்து வருகிறார்கள். இதனால் மத்திய அரசும் இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    India Stands with Israel tag goes viral after Palestinians attack Israel yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X