பாக். தலைநகர் வரை நெருங்கிய இந்தியா.. இதுதான் எச்சரிக்கை மெசேஜ்! தாக்குதல் இடங்களை பாருங்க புரியும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த இரண்டு நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்தியா அதை வெற்றிகரமாக முறியடித்தது. மேலும், பாகிஸ்தானின் ஏர் பேஸ்களை குறிவைத்தும் இந்தியா தாக்குதல் நடத்தியது. குறிப்பாக நூர் கான் விமான தளம் மீதான தாக்குதல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்..

ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர் தொடங்கி எல்லையோரம் உள்ள பல பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், இந்திய ராணுவம் அதை வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. நேற்றும், இதேபோல இந்தியா மீது பாக். தாக்குதல் நடத்தியிருந்தது.

India Strikes Nur Khan Air Base Near Islamabad Strategic Impact of Proximity

இந்தியா பதிலடி

அதற்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு ஏர்பேஸ்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இன்று காலை இந்தியா ராணுவம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் இது உறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள சக்லாலா ஏர் பேஸ், முரிட் ஏர் பேஸ் (சக்வால்), ரஃபிகி ஏர் பேஸ் (ஷோர்கோட்), ரஹீம் யார் கான் ஏர் பேஸ் (தெற்கு பஞ்சாப்), சுக்கூர் ஏர் பேஸ் / பாஃப் பேஸ் போலாரி, சூனியன் ஏர் பேஸ் ஆகிய இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் எல்லையோரக் கிராமங்களில் பொதுமக்களை நோக்கித் தாக்குதல் நடத்துகிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும்போதும் இந்தியா ராணுவ முகாம்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தியுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ரேடார் அமைப்புகள், கமாண்ட் சென்டர்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுதான் முக்கியம்

இதில் நூர் கான் விமானத் தளம் அல்லது நூர் கான் விமானத் தளம் மீது இந்தியா நடத்திய தாக்குதல் தான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்பு சக்லாலா விமானப்படைத் தளம் என்று அழைக்கப்பட்ட இது, இப்போது நூர் கான் விமான தளம் என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்தத் தளத்தில் தான் பாகிஸ்தானின் ராணுவ தலைமையிடமே அமைந்துள்ளது. அதாவது இதுதான் பாகிஸ்தான் ராணுவத்தின் இதயம்.. அங்கேயே இறங்கி இந்தியா அடித்துள்ளது.

தலைநகருக்கு மிக அருகே

மேலும், இந்தப் படைத்தளம் பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இது பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான ஏர் பேஸ்களாக கருதப்படுகிறது.. பாகிஸ்தான் ராணுவ தலைமையிடமாக இருப்பதால் விமானப்படைத் தளமாக மட்டுமின்றி, அந்நாட்டின் விஐபிகள் விமானப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் மையாகவும் இது இருந்துள்ளது. 1965 மற்றும் 1971 போர்களிலும் கூட இந்தத் தளம் பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது. இதை இந்தியா காலி செய்யும் வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

வான்வழி எரிபொருள் நிரப்புதல் தொடங்கிப் பல முக்கிய விஷங்களுக்கு இந்த ஏர் பேஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், விமானப்படை பைலட்களுக்கான பயிற்சிக் கல்லூரியும் இங்கு தான் அமைந்துள்ளது. இந்தளவுக்கு சென்சிடிவ்வான இடத்தை கூட பாதுகாக்க முடியாத அளவுக்குத் தான் பாகிஸ்தான் இருக்கிறது. தலைநகருக்கு அருகே அமைந்துள்ள இடத்தையும் இந்தியா தாக்கியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா அனுப்பும் மெசேஜ்

மேலும், இந்தியா தாக்குதல் நடத்திய இடங்களை நாம் மேப்பில் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குத் தெளிவாகப் புரியும். அதாவது இந்தியா எல்லையோரப் பகுதிகள் மட்டுமின்றி, பாகிஸ்தான் முழுக்க தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா நினைத்தால் தலைநகர் இஸ்லாபமாத் உட்பட எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதையே இது காட்டுவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+