வாக்கு வங்கி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.. பிரிட்டனுக்கு இந்தியா கடும் கண்டனம்
டெல்லி: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தியதை அடுத்து பிரிட்டன் தூதருக்கு இந்திய கண்டனம் தெரிவித்துள்ளது.
3 வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு எதிரானது என கூறி லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த சட்டத்தை திரும்ப பெற கோரி டெல்லி எல்லையில் நவம்பர் 28-ஆம் தேதி முதல் அதாவது 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசு- விவசாய சங்கங்களிடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்த போராட்டத்திற்கு சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், பாப் பாடகி ரெஹான்னா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
டெல்லி விவசாயிகள் போராட்ட விவகாரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என ஆன்லைனில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அது போல் சில பிரிட்டன் எம்பிக்களும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதன்படி லண்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் நேற்று இரவு டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. இந்திய விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த விவாதிக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையில் மற்றொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் மூக்கை நுழைக்கும் செயல் என இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் நடந்த நிகழ்வுகளை தவறாக சித்தரிப்பதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் அறிவுறுத்தினார்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை பிரிட்டன் ஊடகங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி சேகரித்து வெளியிட்ட நிலையில் இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் இல்லை என எப்படி கூற முடியும்? விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய தூதரகம் விளக்கிக் கூறியும் பிரிட்டன் தவறாகவே விளக்கியுள்ளது என தனது அறிக்கையில் இந்தியா தெரிவித்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications