நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பறந்த உத்தரவு! பயணிகள் கவனம்
டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த விமானப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது. விமான பயணிகள் இது குறித்து தெரிந்துக்கொள்வது முக்கியம்.
இந்தியாவின் பல நகரங்கள் மீது பாகிஸ்தான் வான் வழி தாக்குதலை தொடங்கியிருக்கிறது. எனவே இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய விமானப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரவின்படி, விமான பயணிகளுக்கான பரிசோதனை இரட்டிப்பாகப்பட்டிருக்கிறது. வழக்கமாக விமான பயணிகளுக்கு ஸ்கிரீனிங் என்கிற பரிசோதனை நடைபெறும். ஆனால் இந்த புதிய உத்தரவின்படி, இத்துடன் சேர்த்து இன்னொரு பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அதாவது பயணிகள் விமானத்தில் படிக்கட்டு வழியாகத்தான் ஏறுவார்கள். அங்கு வைத்து அவர்கள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதேபோல விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பயணிகளின் உறவினர்கள் விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவிடுவது வழக்கம். ஆனல் இந்த உத்தரவையடுத்து இனி பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்வையாளர்களுக்கான நுழைவு மூடப்படும். அதேபோல, பாதுகாப்பு பணியில் ஏர் மார்ஷல் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் பயணிகளை போல சாதாரண உடையில் இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் ஆயுதம் இருக்கும். பயணிகளுக்கு நடுவே, சாதாரண பயணி போல இருந்து சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காண்பார்கள். இதன் மூலம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தடுக்கப்படும்.
எல்லையில் தற்போது பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மற்றம் ராஜஸ்தானின் பல நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை தொடங்கியிருந்தது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் துண்டிக்கபட்படிருக்கிறது. ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தானின் லாகூர் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications