இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி.. 2 வருடங்களுக்கு பிறகு இயல்பு நிலை
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2019 மார்ச் மாதம் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், சில மாதங்களில் முதலில் உள்ளூர் விமானச் சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏர் பப்பிள் முறையில் 2021 இறுதி முதல் சில சர்வதேச நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

இருப்பினும், ஒட்டுமொத்த விமானச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை அப்படியே இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு டிசய 15ஆம் தேதி முதலில் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
அப்போது உருமாறிய ஓமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்ததால், சர்வதேச விமானச் சேவைக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடர்ந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், மார்ச் 27 முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து விமானச் சேவையைத் தொடங்கலாம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications