Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா திடீர் ஆதரவு? களத்தில் 'ரா'-பரபரக்கும் தூதரகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் திடீரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடதுசாரி வேட்பாளரான அனுர குமார திசநாயக்கவை முதலில் இந்தியா ஆதரித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் தற்போது சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் எனபதற்கான முன்னெடுப்புகளை இந்தியா தரப்பு தமிழர் பகுதிகளில் மேற்கொண்டு வருவதாகவும் கொழும்பு மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஏ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரி அனுர குமார திசநாயக்க, ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், நாமல் ராஜபக்சே உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

sri lanka presidential election 2024 sri lanka

அனுராவை ஆதரித்த இந்தியா?: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரியான அனுர குமார திசநாயக்கவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கடந்த சில மாதங்களாக கணிப்புகள் தெரிவித்து வந்தன. இதனால் அனுர குமார திசநாயக்கவை டெல்லிக்கு வரவழைத்து மத்திய அரசு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்மூலம் அனுர குமார திசநாயக்கவை இந்தியா ஆதரிக்கிறது என தோற்றம் உருவாக்கப்பட்டது.

அனுராவின் சீனா பாசம்: அதேநேரத்தில் அனுர குமார திசநாயக்கவின் செயல்பாடுகள் சீனா ஆதரவை வெளிப்படுத்துவதாக இருந்தது. சீனா தரப்புடன் அனுர குமார திசநாயக்க நெருக்கம் காட்டி வந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடியும் உருவானது. இந்த நிலையில் தற்போதைய இலங்கை தேர்தல் களம் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கக் கூடும் என்கின்றன சில கருத்து கணிப்புகள். ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சியான தமிழரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை அறிவித்திருக்கிறது.

சஜித் பிரேமதாசவுக்கு இந்தியா திடீர் ஆதரவு?: இதனையடுத்து இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். இதனிடையே இலங்கை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது திடீரென சஜித் பிரேமதாசவை இந்தியா ஆதரிக்கும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் இந்திய தூதரகம், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக தமிழர்களை வாக்களிக்க வைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறதாம். இதற்காகவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு பிரிவான 'ரா'வின் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஜரூராக களமிறங்கி செயல்பட்டும் வருகின்றனராம். இலங்கையில் ஈழத் தமிழர் தரப்பு சஜித் பிரேமதாசவையும் சிங்களர் தரப்பு அனுரா குமார திசநாயக்கவையும் ஆதரித்து வாக்களிக்கும் போக்கு நிலவுவதாகவும் இலங்கை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல சீனாவும் தமக்கு ஆதரவான அனுர குமார திசநாயக்கவை வெல்ல வைக்க படுதீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா- சீனா: இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் கடந்த காலங்களிலும் இந்தியா- சீனா இருதரப்பும் மறைமுகமாக மோதியது உண்டு. ரணில் விக்கிரமசிங்கே, சிறிசேனா தரப்பை இந்தியா ஆதரித்தது என்கிற கருத்தும் உண்டு. தற்போதும் இலங்கைத் தீவில் இந்தியாவும் சீனாவும் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகின்றன. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே இலங்கையில் இந்தியா- சீனா நாடுகளில் யார் கை ஓங்கும் என்பதும் தெரிய வரும் என்கின்றன கொழும்பு வட்டாரங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+