மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறுவார்களா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும்?
டெல்லி: மாலத்தீவு நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு பகிரங்கமாக கெடு விதித்துள்ளார். மாலத்தீவு அதிபர் மொய்சு விதித்த மார்ச் 15-ந் தேதி கெடுவுக்குள் இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேறுமா? மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் இந்தியாவுக்கு முன்னுரிமை என்ற கோஷமும் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. இந்தியாவை வெளியேற்றுவோம் என வாக்குறுதி தந்த மொய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அதிபரானது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். அத்துடன் சீனாவுடன் மிக நெருக்கமான உறவையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் மாலத்தீவின் அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த பின்னணியில் மாலத்தீவு நாட்டில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவத்தினர் அனைவரையும் மார்ச் 15-ந் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என அந்நாட்டு அதிபர் மொய்சு கெடு விதித்துள்ளார். மாலத்தீவு நாட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புக்காக துருவ் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியது. இவற்றை கையாள்வதற்காக ராணுவ வீரர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ராணுவ வீரர்களைத்தான் உடனே வெளியேற்ற வேண்டும் என கெடு விதித்துள்ளது மாலத்தீவு.
இருந்த போதும் இதுவரை மத்திய அரசு இது தொடர்பாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. மாலத்தீவுடனான உறவு விரிசலடைந்துவிட்ட நிலையில் ராணுவத்தினரை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசு எத்தகைய முடிவை எடுக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மாலத்தீவில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களும் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications