டிரம்புக்கு இந்தியா தந்த முதல் அடி.. உங்க போர் விமானங்கள் வேண்டாம்.. ரூ.31,553 கோடி டீல் ‛கேன்சல்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ள அமெரிக்காவுக்கு உரிய முறையில் பதிலடி தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக உங்களின் போயிங் பி 81 ரக கண்காணிப்பு போர் விமானங்கள் எதுவும் வேண்டாம் என்று ரூ.31,553 மதிப்பிலான ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

india-us-trade-deal-india-pauses-3-6-billion-dollar-deal-to-acquire-boeing-jets-after-donald-trump

நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடந்த 10 ஆண்டுகளாக மேம்பட்டு இருந்தது. டிரம்ப் மற்றும் மோடி இடையே நல்ல நட்பு இருக்கிறது. ஆனாலும் டிரம்ப் இப்படி 50 சதவீத வரியை போட்டுள்ளார்.

முதற்கட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக இன்னும் 19 நாட்களுக்கு பிறகு 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு டிரம்ப் முன்வைக்கும் காரணம், என்னவென்றால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தான். அதனை கைவிடாததால் தான் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் கூட இந்தியாவுக்கு 2ம் நிலை சார்ந்த தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார். ஆனால் நம் நாடு மிரட்டலுக்கு பயப்படவில்லை. தேச நலன்கள் சார்ந்து முடிவுக்கு எடுக்கப்படும்.

140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது என்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்நிலையில் தான் டிரம்பின் கொட்டத்தை அடக்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக போயிங் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 'பி - 81 பொசைடன்' போர் விமானங்களை நம் ராணுவ அமைச்சகம் வாங்கியது. முதற்கட்டமாக 2009ல் 12 போர் விமானங்கள் வாங்கப்பட்டன. அடுத்ததாக 2016ல் நான்கு விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த விமானங்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய கடற்படையில் பி-81 பொசைடன் போர் விமானங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கடல்சார் கண்காணிப்பு பணியில், இந்த போயிங் ரக விமானங்கள் பெரும் உதவியாக இருக்கும் நிலையில், மேலும் பல விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவுசெய்தது. இதற்காக 2021ல், அமெரிக்க வெளியுறவு துறையுடன், நம் நாட்டு ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

மேலும் 6 போர் விமானங்களை வாங்க ரூ.20,572 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக இந்த ஒப்பந்தம் தாமதமானது. அதுமட்டுமின்றி சப்ளை செயின் பாதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் இதன் மதிப்பு அதிகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அதிகரித்தது. ரூ.20,572 கோடியில் இருந்து ரூ.31,553 கோடியாக உயர்ந்தது.

ரூ.31,553 கோடிக்கு மொத்தம் 6 போயிங் பி 81 ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பி - 81 பொசைடன் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசு தெரிவிக்காமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+