டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21ம் நூற்றாண்டு நமக்கானது.. உலகையே இந்தியாதான் இனி வழி நடத்த போகிறது.. பிரதமர் மோடி நம்பிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும், கொரோனாவிற்கு பிந்தைய உலகை இந்தியா வழி நடத்தும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    லாக்டவுன் 4.0 மாறுபட்டதாக இருக்கும் - பிரதமர் மோடி அறிவிப்பு

    இந்தியாவில் கடந்த 2 மாதமாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இந்தியாவில் வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

    ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும் இந்தியாவில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மூன்றாவதாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார்.

    மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனா பரவும் இந்த காலத்தில் இந்தியா ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது கொரோனா எனும் ஒரு வைரஸ். ஒரே வைரஸ் நமது வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

    உலகம் போராட்டம்

    உலகம் போராட்டம்

    கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது. நாம் இதில் மிக தீவிரமாக போராடி வருகிறோம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இதற்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது.

    எதிர்பார்க்காத விபரீதம்

    எதிர்பார்க்காத விபரீதம்

    நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது. யாரும் எதிர்பாராத விபரீதம் இது. ஆனால் என்ன நடந்தாலும் நாம் தோற்க கூடாது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். கொரோனாவிற்கு பிந்தைய உலகை இந்தியா வழி நடத்தும். இந்த 21ம் நூற்றாண்டு நமக்கானது. உலகின் கொள்கையை இந்தியா மாற்றி அமைத்து வருகிறது. இந்தியா மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    நம்பிக்கையாக இருப்போம்

    நம்பிக்கையாக இருப்போம்

    இந்தியா சிறப்பாக செயல்படும் என்று உலகிற்கே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் உலகின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    India will lead the all countries here after says PM Modi in his speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X