உன்னிப்பாக கவனிக்கிறோம்.. இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.. மத்திய அரசு உறுதி!
டெல்லி: இலங்கையின் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சூழலை கடக்க முயற்சிக்கும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் 9ம் தேதி தொடங்கிய மக்கள் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மீண்டும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் மாளிகை முற்றுகை
நேற்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து போராட்டக்காரர்கள் திரண்டனர். அப்போது அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகையிலிருந்து தப்பிச் சென்றார்.

பிரதமர் வீட்டுக்கு தீ
பின்னர் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்தமாக மாளிகையை சூறையாடினர். தொடர்ந்து பழைய நாடாளுமன்ற வளாகத்தையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து இரவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் போராட்டம் உச்சத்தை எட்டியது.

தொடரும் குழப்பம்
இதனிடையே அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, வரும் 13ஆம் தேதி பதவி விலக ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் ராஜினாமா செய்தார். இதனால் 30 நாட்கள் சபாநாயகர் அதிபராக பதவி வகிப்பார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள போராட்டங்களால் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனை முடிவு செய்வதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா துணை நிற்கும்
இந்த நிலையில், அண்டை நாடான இலங்கையுடன் இந்தியா ஆழமான நாகரீக பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்கள் எதிர்கொண்டு வரும் பல சவால்களை நாங்கள் அறிவோம். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுக்கு நாங்கள் நிற்போம்.

மத்திய அரசு உறுதி
இலங்கையின் கடுமையான பொருளாதார நிலைமையை சரி செய்வதற்காக இந்தியா இந்த ஆண்டு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இலங்கையின் அண்மைக்கால சூழல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications