ரஃபேலை விடுங்க.. இந்திய விமானப்படையின் பலமே இதுதான்! நாளை நடக்கப்போகும் சம்பவம்
டெல்லி: இந்திய விமானப்படை விமானங்கள் நாளை பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இந்திய விமானப்படை எவ்வளவு பெரியது? பாகிஸ்தானை சமாளிக்கும் பலம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
உலகின் மூன்றது விமானப்படை நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவிடம் கூட இல்லாத பலம் நம்மிடம் இருக்கிறது.

- மொத்த வீரர்கள் - 1.4 லட்சம்
- விமானங்கள் - 2,000 வரை
- போர் விமானங்கள் மட்டும் - 600க்கும் அதிகம்
- விமான தளங்கள் - 60க்கும் அதிகம்
இது அடிப்படை தகவல்களாகும். நம்மிடம் இருமுனை தாக்கும் திறன் இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் போரிட்டுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் நம்மால் சீனாவின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியும்.
முக்கியமான விமானங்களின் பட்டியலில் பிரான்ஸிலிருந்து வாங்கப்பட்ட ரஃபேல் விமானம் முதல் இடத்தில் இருக்கிறது. ரஃபேல் 4.5ம் தலைமுறை போர் விமானமாகும். மொத்தம் 36 இருக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ தூரத்திற்கு நிற்காமல் பறக்கும். 500 கி.மீ வரை உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை இந்த விமானம் தாங்கி செல்லும்.
என்னதால் ரஃபேல் கிங்காக இருந்தாலும், இந்திய விமானப்படையின் கிங் மேக்கர் சுகோய் - 30எம்கேஐ எனும் போர் விமானம்தான். 270க்கும் அதிகமான விமானங்கள் நம்மிடம் இருக்கிறது. இது மொத்த போர் விமானங்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ பாதிக்கு பாதியாகும். ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா இந்த விமானங்களை தயாரித்திருக்கிறது. எல்லா கால நிலைகளிலும், மலை, பாலைவனங்கள் என சிக்கலான நிலப்பரப்பிலும் அசால்ட்டாக செயல்படும்.
இதன் சிறப்பம்சமே, Thrust Vectoring Nozzles எனும் தொழில்நுட்பம்தான். அதாவது இந்த தொழில்நுட்பத்தை கொண்ட விமானம் சட்டென திசையை மாற்றும் திறன் கொண்டது.
இதற்கு அடுத்த இடத்தில் தேஜஸ் விமானமும், மிராஜ் விமானங்களும் இருக்கின்றன. இதில் மிராஜ் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் முக்கிய பங்கு வகித்தது. இது தவிர மிக், ஜாகுவார் உள்ளிட்ட விமானங்களும் இருக்கின்றன. விமானங்கள் ஒருபுறம் எனில், ஹெலிகாப்டர்கள் மற்றொரு பலமாக இந்திய விமானப்படைக்கு இருக்கிறது.
அப்பாச்சி, சினூக், ஹெச்ஏல் ருத்ரா, ஹீரோன் உள்ளிட்ட ஹெலிகாப்டர்கள் கெத்து காட்டுகின்றன. நமது விமானப்படையின் முக்கியமான பலமே, சட்டென தாக்கிவிட்டு திரும்பும் திறன்தான். மட்டுமல்லாது ரேடாரில் சிக்காத திறனும் நமக்கு பிளஸ் பாயிண்ட்தான்.
கடந்த ஏப்.22ம் ஆண்டு பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாகும். இதற்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவி செய்கிறது என்பது குற்றச்சாட்டு.
எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாளை ஏறத்தாழ 300 நகரங்களில் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications