இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் மாயம்.. அசாம் அருகே தேடும் பணி தீவிரம்!
டெல்லி: அசாம் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் - 30 ரக போர் விமானம் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் இருந்து புறப்பட்ட போர் விமானம் திடீரென ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானத்தில் 2 வீரர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானம் காணாமல் போனது தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய் சு-30 MKI ரக போர் விமானம், அசாம் ஜோர்ஹாட்டில் இருந்து இன்று இரவு 7.42 மணிக்கு புறப்பட்டது. இந்த நிலையில் திடீரென ரேடார் தொடர்பிலிருந்து போர் விமானம் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.
இதனை இந்திய விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. எக்ஸ் பதிவில், 'காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளது.
1980களில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட சுகோய் சு-30 MKI ரக போர் விமானங்கள் மிகவும் பிரத்யேக அம்சங்கள் கொண்டதாகும். இந்திய விமானப்படையின் மிக முக்கிய பலமாகவும், முதுகெலும்பாகவும் விளங்குகிறது.
நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் இதன் பல படைப்பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் சு-30 விமானங்கள், முதன்முதலில் 1997-ல் இந்தியாவிடம் வழங்கப்பட்டன. தற்போது, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. இந்திய விமானப்படையிடம் 250-க்கும் மேற்பட்ட இந்த ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications