டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குவிக்கப்பட்ட சீன விமானங்கள்.. மோடியின் அவசர மீட்டிங்.. சீனா - இந்தியா இடையே போர் மூளும் அபாயம்?

Google Oneindia Tamil News

டெல்லி; இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் மூள்வதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு ராணுவமும் தீவிரமாக மோதிக்கொள்ள தயார் ஆகி வருவது அதிர்ச்சி அளித்துள்ளது.

Recommended Video

    India - China இடையே போர் மூளும் அபாயம்? | Oneindia Tamil

    ஆசியாவில் தற்போது இரண்டு வல்லரசு நாடுகளுக்கும், அணு ஆயுதம் கொண்ட நாடுகளுக்கும், தீவிரமான ராணுவ பலம் கொண்ட நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனா, இந்தியா இடையே நிலவி வந்த பல்வேறு கருத்து வேறுபாடுகள்தான் இதற்கு காரணம்.

    கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ரீதியான சண்டை, நேபாள் எல்லையில் இந்தியா அமைத்த சாலை தொடங்கி இந்த மோதலுக்கு நிறைய காரணங்கள் உள்ளது. இரண்டு நாடுகளும் தற்போது தங்கள் எல்லையில் படைகளை குவிக்கும் நிலைக்கு சென்றுள்ளது.

    5 நாளில் அதிர்ச்சி.. போர் ஜெட்களை இந்திய எல்லையில் இறக்கிய சீனா.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் போட்டோ5 நாளில் அதிர்ச்சி.. போர் ஜெட்களை இந்திய எல்லையில் இறக்கிய சீனா.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் போட்டோ

    கைகளால் நடக்கும் சண்டை

    கைகளால் நடக்கும் சண்டை

    பொதுவாக இந்தியா மற்றும் சீன இடையே லடாக் மற்றும் சிக்கிம் எல்லையில்தான் சண்டை நடக்கும். அதிலும் எப்போது சண்டை கற்களை வீசி தாக்கிதான் நடக்கும். இரண்டு நாட்டு படைகளும் எப்போது துப்பாக்கிகளை பயன்படுத்தியது கிடையாது. அதேபோல் சீன இந்திய எல்லையில் அத்து மீறினால் மட்டுமே இப்படி சண்டை நடக்கும். வேறு விதமான தாக்குதல்கள் நடந்தது இல்லை.

    இந்த முறை வித்தியாசம்

    இந்த முறை வித்தியாசம்

    ஆனால் இந்த முறை நிலை வித்தியாசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டால் உடனே அங்கு சமாதானம் செய்யப்பட்டு, படைகள் திரும்ப தங்கள் நிலைக்கு செல்லும். டோக்லாம் எல்லையை தவிர எங்கும் நீண்ட நாட்களாக சண்டை நீடித்தது கிடையாது. ஆனால் இந்த முறை நிலைமை அப்படி இல்லை. இந்த முறை சரியான திட்டமிடலுடன் சீனா போருக்கு தயார் ஆகி வருகிறது .

    திட்டமிடல் என்ன

    திட்டமிடல் என்ன

    அதாவது சீனா இந்த முறை போகிற போக்கில் எல்லை மீறி அத்துமீறல்களை செய்யவில்லை. மாறாக சீனா படைகளை குவிப்பது, பங்கர்களை அமைப்பது, போர் விமானங்களையே குவிப்பது, டென்ட்களை அமைப்பது என்று முறையாக திட்டமிட்டு பணிகளை செய்கிறது. அங்கு மூத்த சீன மேஜர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். பெரிய போருக்கு ஆயத்தம் ஆவது போல சீனா ஆயத்தம் ஆகி வருகிறது. இந்திய படைகளும் இதற்காக எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது.

    மேலே போன சீனா

    மேலே போன சீனா

    இந்த நிலையில்தான் சீனா ஒரு படி மேலே போர் விமானங்களை சீன எல்லையில் குவிக்க தொடங்கி உள்ளது. . இதற்காக சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கி உள்ளது. பாங்காங் டிசோ பகுதியில் உள்ள கரி குன்ஷா விமான நிலையம் அருகே இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 5 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த விமானங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை. இந்தியாவை தாக்கும் வகையில் இது அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மோடி அவசர மீட்டிங்

    மோடி அவசர மீட்டிங்

    இதையடுத்துதான் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் பிரதமர் மோடி தற்போது அவசர மீட்டிங் நடத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்ற தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்று இருக்கிறார்கள். சீனாவின் படைகள் எங்கே இருக்கிறது, என்ன செய்து கொண்டு இருக்கிறது, நிலைமை எப்படி இருக்கிறது என்று பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    சாதரண காரியம் இல்லை

    சாதரண காரியம் இல்லை

    ஒரு நாட்டின் பிரதமர் இப்படி அவசர ஆலோசனை நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. அதேபோல் இந்தியாவில் பெரிய எல்லை பிரச்சனை வந்தால் மட்டுமே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் களமிறக்கப்படுவார். இப்போது மீண்டும் அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். அப்படி என்றால் நிலைமை கைமீறி போய் உள்ளது என்று கூறுகிறார்கள்.

    போர் வர வாய்ப்பு உள்ளதா

    போர் வர வாய்ப்பு உள்ளதா

    இரண்டு நாடுகளில் இப்படி அடுத்தடுத்து போருக்கான ஆயத்தங்கள் செய்யப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடக்கும் விஷயம் எதுவும் நல்லதற்கு இல்லை, இது இப்போதைக்கு சரியாக வாய்ப்பில்லை, இந்த மோதல் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் போர் உடனே வர வாய்ப்பில்லை. போர் ஏற்பட்டால் அதற்கு முன் சிறு சிறு சண்டை நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    Indian and China in the bricks of amid raise of tension and aggression in Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X