Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான்டா இந்தியன் ஆர்மி.. தரைமட்டமான பாகிஸ்தான் ராணுவ முகாம்.. திட்டமிட்டு நடந்த தாக்குதல்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழிக்கும் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் அடங்கிய வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளுக்கு அருகில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகள், ஏவுதளங்கள் உள்ளிட்டவற்றை இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கையாக அழித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் இருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு படை ஆபரேஷன் சிந்தூர்-ஐ செயல்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாத முகாம்களை அழித்தது.

Indian Army released a video of their coordinated fire assault on Pakistan Launpads located close to LOC

இதில் எராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 26 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. அந்த டிரோன் மற்றும் ஏவுகணைகளை வான் வெளியிலேயே வைத்து இந்தியா அழித்தது.

ஆனாலும் நாளுக்கு நாள் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்தது. பூஞ்ச் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்கள் மீதும், பள்ளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியது. இதில் 2 குழந்தைகள் பலியான நிலையில், நேற்று இரவு நடந்த தாக்குதல் அரசு அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விமான தளங்கள், ராணுவ தளங்கள், மருத்துவமனைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்கி வருகிறது.

இதன் காரணமாக நேற்றிரவு பாகிஸ்தானின் 3 விமான தளங்களை இந்திய ராணுவம் அட்டாக் செய்தது. பாகிஸ்தானில் உள்ள நூர் கான் விமான தளம், முரித் விமான தளம் மற்றும் ரஃபிகி விமான தளம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் படைகள் இந்திய எல்லைக்கு அருகில் குவிந்து வருவதாகவும் கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்கள், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை மே 8 மற்றும் மே 9 ஆகிய 2 நாட்களில் இந்திய ராணுவம் திட்டமிட்டு துல்லிய தாக்குதலை நடத்தி அழித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்திய பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு இந்த கட்டடங்கள் காரணமாக அமைந்தன. இதனை இந்திய ராணுவம் அழித்து தரைமட்டமாக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+