நொறுங்கிப்போன பாகிஸ்தான்.. 10 நாள் கழித்து தெரிய வந்த மேஜர் தகவல்.. இழப்புகள் 6 மடங்கு மோசமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாதிகளின் முகாம்களைத் தாக்கியது. இருப்பினும், அதைப் பொறுக்காத பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்தியப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்தியா ராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்த நிலையில், இந்தியாவின் பதிலடியில் 64 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

India pakistan Pakistan

பாகிஸ்தான்

அதேநேரம் இந்திய பாதுகாப்புப் படையின் இந்த வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் அத்துமீறி இந்தியப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்த முயன்றது. இந்திய ராணுவத்தின் தளங்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்த முயற்சி எடுக்கப்பட்டன. இருப்பினும், அந்த தாக்குதல்கள் அனைத்தையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தன.

மேலும், பாகிஸ்தான் ராணுவ தளங்கள், ஏர் பேஸ்கள் என முக்கியமான இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின. இரு தரப்பு மோதல் முடிவுக்கு வந்து சுமார் 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாகக் குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

64 பேர் உயிரிழப்பு

அதாவது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 64 பாகிஸ்தான் வீரர்கள் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக இந்தியா ராணுவம் தெரிவித்தாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் எடுத்த பதிலடி நடவடிக்கையில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

அதாவது எல்லை மீறி இந்தியப் பகுதிகளில் எல்லையோரம் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியா வீரர்கள் கொடுத்த பதிலடியில் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது 90க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவம் குறிப்பிட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

6 மடங்கு அதிகம்

இந்த மோதல் தொடங்கியது முதலே இந்தியா குறித்து பொய்யான தகவல்களைத் தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் பரப்ப முயன்று வந்தது. மேலும், இந்தியாவின் தாக்குதல்களால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்றன. அப்படி தான் இந்தியா நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியிருந்தது. இருப்பினும், உண்மையில் அதை விட கிட்டதட்ட ஆறு மடங்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்

இந்தியா முதலில் ஆபரேஷன் சிந்தூரை நடத்திய போது, பாகிஸ்தானில் குடியிருப்புகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது இந்தியா எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை. சரியாகத் தீவிரவாத முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் திட்டமிட்டு துல்லியமாக இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.

ஆனால், இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் எல்லை மீறி இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அப்போதும் கூட முதல் இரு நாட்கள் இந்தியா பதிலடி கொடுக்கவில்லை. ஆனால், தாக்குதல் தொடரவே பொதுமக்களைப் பாதுகாக்க இந்திய ராணுவம் திரும்பத் தாக்கத் தொடங்கியது. முக்கியமான ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் இந்தியத் தாக்குதலால் நிலைகுலைந்து போய் மோதலை முடிவுக்கு வர அழைப்பு விடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+