Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ரகசிய உளவு அமைப்புகளைத் திருடி பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விற்றதாக விமானப் படையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக உளவுத் தகவல்களை அந்த நபர் திருடி வந்ததாகவும் சீக்ரெட்டாக அந்த நபரை இந்தியப் படைகள் தட்டி தூக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்து பணியாற்றும் பல லட்சம் வீரர்கள் முப்படைகளிலும் பணியாற்றி வருகிறார்கள். நாம் நிம்மதியாக இருக்க அவர்கள் செய்யும் தியாகங்களே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேநேரம் சில கறுப்பு ஆடுகள் பணத்திற்காக இந்திய உளவுத் தகவல்களையே விற்றுவிடுகிறது. அப்படியொரு நபர் தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Indian arrested for spying for Pakistan IAF Civilian Sumit Kumar Leaked Aircraft Missile Data

கைது

இந்திய விமானப்படை ஸ்டேஷனில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் இவர் நேரடியாக விமானப் படையில் வேலை செய்யும் நபர் இல்லை. விமானப் படைத் தளத்தில் வேலை செய்யும் ஒரு சாதாரண சிவில் ஊழியர் ஆவார். பாகிஸ்தான் உளவாளிகளுக்கு முக்கியமான ராணுவத் தகவல்களைக் கசியவிட்டதாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் நொட்வொர்க்கை இது அம்பலப்படுத்தியதாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் உளவுத்துறையினர் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கை இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது

என்ன நடந்தது!

ராஜஸ்தான் உளவுத் துறை பல மாதங்கள் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது கடந்த 2026 ஜனவரியில் ஜெய்சல்மேரைச் சேர்ந்த ஜபாரா ராம் என்பவர் கைது செய்யப்பட்டபோது இந்த வழக்கு ஆரம்பமானது. புலனாய்வுத் துறை அப்போது ராமிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் குறித்த தகவல்களை தங்களிடம் சொன்னதாக காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் பிரஃபுல் குமார் தெரிவித்தார். ராம் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே சுமித் குமாரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

யார் இவர்?

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுமித் குமார், அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாபுவா விமானப்படை நிலையத்தில் மல்டி டாஸ்கிங் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தான் இவர் விமானப்படை தொடர்பான ரகசியத் தகவல்களை யாருக்கும் தெரியாமல் திருடி, பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பியுள்ளார். சோஷிய் மீடியா மூலமாகவே இவர் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இவர் விமானப் படை ஸ்டேஷனில் வேலை செய்து வந்தவர் என்பதில் ஈஸியாக உள்ளே சென்றுவிட்டார். மேலும், மல்டி டாஸ்கிங் ஊழியருக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வேலை இருக்கும். இதனால் அவர் உளவுத் தகவல்களைத் திருடும்போது, ஏதோ அலுவல் ரீதியாகவே செய்வதாகப் பலரும் நினைத்துள்ளனர்.. இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து ராணுவம் குறித்த தகவல்களைத் திருடி வந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு கொடுத்த கறுப்பு ஆடு

ராஜஸ்தான் உளவுத்துறையும் விமானப்படையின் உளவுப் பிரிவும் இணைந்து அதிரடி ஆபரேஷனை நடத்தி சுமித் குமாரை கைது செய்துள்ளது. இதையடுத்து விசாரணைக்காக அவர் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமித் 2023ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும் பணத்திற்காக மிக முக்கியமான தகவல்களையும் கூட பாகிஸ்தானிடம் பகிர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, சுமித் குமார் சாபுவா விமானப்படை நிலையம் மற்றும் பிகானூரில் உள்ள விமானப்படை ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு விமானப்படைப் பிரிவுகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டது தெரிய வந்துள்ளது.. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகளின் இருப்பிடங்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பற்றிய முக்கியமான விவரங்களைக் கூட பகிர்ந்துள்ளார். தனது போன் நம்பரை வைத்து உருவாக்கப்பட்ட சோஷியல் மீடியாவில் இருந்தே பாகிஸ்தான் உளவாளிகளுக்கு இவர் தகவல்களை அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.

வழக்குப்பதிவு

சுமித் குமார் மார்ச் 22ம் தேதி கைது செய்யப்பட்டார். 1923ஆம் ஆண்டு Official Secrets Act மற்றும் 2023ஆம் ஆண்டு BNS சட்டம் ஆகியவற்றின் கீழ் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புக் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரைப் போலவே மிகப் பெரியளவில் பாகிஸ்தானுக்காக வேலை செய்யும் கறுப்பு ஆடுகள் இந்தியாவில் செயல்பட்டு வருவதையே இது காட்டுவதாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் இவருக்கு உடந்தையாக இருந்தோரை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+