டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 முத்தான அறிவிப்புகள்.. வருமான வரி முதல்.. பான் கார்ட் வரை.. பட்ஜெட்டின் டாப் அம்சங்கள் இதோ!

வருமான வரி விதிப்பு தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தனி வருமான வரி விதிப்பு தொடங்கி பொருட்களுக்கான வரி விதிப்பு வரை 2023 -24 பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள், வருமான வரி விதிப்பு தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? சொல்லாமல் சொல்லிய மத்திய அரசு.. இதை படிங்க! புதிய வரி விதிப்பு முறைதான் பெஸ்ட்! அதிக பலன் உடையதா? சொல்லாமல் சொல்லிய மத்திய அரசு.. இதை படிங்க!

அறிவிப்பு 1 முக்கிய அறிவிப்புகள்

அறிவிப்பு 1 முக்கிய அறிவிப்புகள்

3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்வே துறையை மேம்படுத்த ரூ2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சாலை கட்டமைப்புகளுக்கு ரூ70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அறிவிப்பு 2 கடன்

அறிவிப்பு 2 கடன்

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ9,000 கோடி கடன் வழங்கப்படும். 50 சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படும். காலாவதியான பழைய வாகனங்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படும். வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அறிவிப்பு 3 - கட்டமைப்பு

அறிவிப்பு 3 - கட்டமைப்பு

5 ஜி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்; இ கோர்ட் திட்டத்துக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் செய்யப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன ஆவணங்களைப் பாதுகாக்க டிஜிட்டல் இ லாக்கர்கள் ஒதுக்கப்படும். மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும். 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும் ; வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம். 42 புதிய சட்டங்கள் அறிமுகம் ; மூலதன முதலீடுகளுக்கான ரூ.10 லட்சம் கோடி வரை 33 சதவீதம் அதிகரிப்பு

அறிவிப்பு 4 - விவசாயம்

அறிவிப்பு 4 - விவசாயம்

பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 63,000 வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும். பயோ மின் திட்டங்களுக்கு ரூ10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற திட்டம் மேற்கொள்ளப்படும். தோட்ட கலைத்துறைக்கு ரூ2,200 கோடி ஒதுக்கீடு

 அறிவிப்பு 5- பெண்கள்

அறிவிப்பு 5- பெண்கள்

1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்கள் 7.5% வட்டியில் ரூ2 லட்சம் வரை சேமிக்க புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்படும். கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

 அறிவிப்பு 6- பான் அட்டை

அறிவிப்பு 6- பான் அட்டை

ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்; அரசு முகமைகளில் அனைத்து டிஜிட்டல் நடைமுறைகளில் பான் அட்டை பொதுவான அடையாளமாக ஏற்கப்படும். பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது. தேசிய தரவுகள் நிர்வாகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் ; வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும்.

அறிவிப்பு 7 - வரி குறைப்பு

அறிவிப்பு 7 - வரி குறைப்பு


இந்த பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்ட பொருட்கள். அதனால் விலை குறையும் பொருட்கள் - செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படுகிறது. சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது, லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது.

அறிவிப்பு 8 - வரி அதிகரிப்பு

அறிவிப்பு 8 - வரி அதிகரிப்பு

இந்த பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட பொருட்கள். அதனால் விலை உயரும் பொருட்கள்- தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு செய்யப்படுகிறது. வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது. சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்

அறிவிப்பு 9 - பழைய வருமான வரி

அறிவிப்பு 9 - பழைய வருமான வரி

பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால்

2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும்.

இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விலங்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

 அறிவிப்பு 10 - புதிய வருமான வரி

அறிவிப்பு 10 - புதிய வருமான வரி

பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இப்போது இந்த புதிய வரி விதிப்பு முறையில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்

உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் .
300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் .
600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும்
900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும்
1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும்
15 above வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் .


விளக்கம்

புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது. ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது.

இது புதிய வரி விதிப்பு முறைக்கு மட்டுமே பொருந்தும்.

0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20சதவீத வரி
15 above : 30 சதவீத வரி

English summary
Indian Budget 2023-24: From Pan card to Income Tax new slab, top 10 announcements from Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X