மோடியின் வானொலி நிகழ்ச்சி மனதின் குரல் மக்களிடத்தில் இப்படி எல்லாம் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது!
டெல்லி: பிரதமர் மோடியின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் (மன்கிபாத்) நாட்டு மக்களிடத்திலேயே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக இந்திய ஊடகம், தொடர்பு கல்வி நிறுவன ஆய்வை சுட்டிக்காட்டி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகம், மக்கள் தொடர்பு கல்வி நிறுவன ஆய்வு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனம் (IIMC) நடத்திய சிறப்பு ஆய்வில், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' உண்மையான பாரதத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்று 76% இந்திய ஊடகவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்ச்சி நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விஷயங்களைப் பற்றி மக்கள் இப்போது அதிகம் அறிந்து கொள்ளும் போக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதனைப் பாராட்டவும் தொடங்கியுள்ளனர். பதிலளித்தவர்களில் 75% பேர், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உறுதி செய்வதற்காக தன்னலமின்றி உழைக்கும் அடித்தட்டு மக்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக 'மனதின் குரல்' உருவெடுத்துள்ளதாகக் கருதுகின்றனர்.
இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவன (IIMC) தலைமை இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் திவிவேதியின் கூற்றுப்படி, ஏப்ரல் 12 மற்றும் 25, 2023 க்கு இடையில் நிறுவனத்தின் வெளிவட்டாரங்கள் தொடர்புத் துறையால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 116 ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக மாணவர்களுடன் தொடர்புடைய மொத்தம் 890 பேர் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் 326 பேரும் ஆண்கள் 564 பேரும் உள்ளனர். பதிலளித்தவர்களில் 66% பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பதிலளித்தவர்களின் கூற்றுப்படி, 'நாட்டைப் பற்றிய அறிவு' மற்றும் 'நாட்டைப் பற்றிய பிரதமரின் பார்வை' ஆகிய இரண்டு முக்கியக் காரணங்களாக நிகழ்ச்சியைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. பதிலளித்தவர்களிடம் அவர்கள் எப்படி கேட்கிறார்கள் என்று கேட்டபோது, ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தவறவிட்டால், 63% பேர் மற்ற ஊடகங்களை விட யூடியூபில் விரும்பிக் கேட்பதாகக் கூறினர். பதிலளித்தவர்களில் 76% பேர் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பல்வேறு விஷயங்களைக் கேட்பதன் மூலம் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதாக உணர்கிறார்கள்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் விவாதித்த எந்தப் பிரச்சினை மக்களை அதிகம் பாதித்தது என்பதையும் இந்த ஆய்வு புரிந்து கொள்ள முயற்சித்ததாக பேராசிரியர் திவிவேதி சுட்டிக் காட்டியுள்ளார். பதிலளித்தவர்களில் 40% பேர் 'கல்வி' என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 26% பேர் 'அடித்தட்டு மக்களின் சாதனைகள் பற்றிய தகவல்' மிகவும் செல்வாக்கு மிக்க தலைப்பு என்று கூறியுள்ளனர்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய தகவல்களை மக்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் ஆய்வு முயற்சித்தது. 32% பதிலளித்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளனர். 29% பேர் தங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். ஆய்வில் வெளிப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான உண்மை, 12% பேர் வானொலியையும், 15% தொலைக்காட்சிகளையும், 37% பேர் இணைய அடிப்படையிலான தளங்களையும் 'மனதின் குரல்' கேட்க பயன்படுத்துகின்றனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications