பாகிஸ்தானுடன் தொடங்கும் போர்? அரபிக்கடலில் Firing Drills.. அப்படினா என்ன? மோடி அதிரடி உத்தரவு
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் ஒருமணிநேரம் வரை ஆலோசனை நடத்திய நிலையில் அரபிக்கடலில் இன்று முதல் 4 நாளுக்கான Firing drillsயை நம் கடற்படை தொடங்கி உள்ளது. இந்த Firing Drills என்பது என்ன? எதற்காக இது மேற்கொள்ளப்படும் என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனை என்பது நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். ராணுவம், விமானப்படை, கடற்படை என்று முப்படை வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தும் வகையில் நம் படை வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாகிஸ்தானை கதி கலங்க வைத்துள்ளது.
இதற்கிடையே தான் இன்று காலையில் திடீரென்று நம் கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் கே திரிபாதி திடெீரன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மோடி அழைத்ததன் பேரில் தினேஷ் கே திரிபாதி சந்திக்க சென்றார். இருவரும் சுமார் ஒரு மணிநேரம் வரை தீவிர ஆலோசனையை மேற்கொண்டனர். அப்போது பிரதமர் மோடி சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்று முதல் வரும் 7 ம் தேதி வரை குஜராத்தையொட்டிய அரபிக்கடலில் Firing Drills நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்திய கடற்படை விமானங்கள் அரபிக்கடலில் கண்காணிப்பு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் 4 நாட்கள் Firing Drills தொடங்கி உள்ளது.
கடற்படையை பொறுத்தவரை Firing Drills என்பது போர் தயார் நிலைக்கான பயிற்சியாகும். இதில் வீரர்கள் தங்களின் திறமையை காட்டுவார்கள். அதேபோல் ஆயுதங்களை பயன்படுத்தி பரிசோதித்து பார்ப்பார்கள். பொதுவாக ஒரு நாட்டுடன் பதற்றம் அதிகரிக்கும் போது இந்த பயிற்சி என்பது மேற்கொள்ளப்படும். அல்லது ஆயுதங்களை பரிசோதிக்கும் வகையில் இந்த பயிற்சி என்பது மேற்கொள்ளப்படும். தற்போது பாகிஸ்தான் உடன் பதற்றம் என்பது அதிகரித்துள்ள நிலையில் இந்த பயிற்சி தொடங்கி உள்ளது.
அதுவும் பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு இந்த பயிற்சி தொடங்கி உள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிராக நம் கடற்படை போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நம் கடற்படை பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கண்காணிப்பு பணியை செய்து வருகிறது.
கடந்த 1ம் தேதி கிரீன் நோட்டிபிகேஷன் என்பது கடற்படை சார்பில் வழங்கப்பட்டது. அதன்பிறகு குஜராத் கடலில் Firing பயிற்சியை தொடங்கியது. இந்த பயிற்சி என்பது அரபிக்கடலில் பாகிஸ்தான் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இருந்து 85 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடந்தது. இந்த பயிற்சியில் நம் கடற்படையின் பல்வேறு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இப்படியான சூழலில் இன்று முதல் வரும் 7 ம் தேதி முதல் அரபிக்கடலில் Firing Drills தொடங்கி உள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications