வங்க கடலில் இந்தியா ஏவுகணை சோதனை.. இந்திய பெருங்கடலில் ஊடுருவிய சீனா உளவு கப்பல்- பகீர் பதற்றம்!
டெல்லி: வங்காள விரிகுடா கடலில் இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் நிலையில் இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல் ஊடுருவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல்கள் நடமாட்டம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவு கப்பல் அனுமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது.

இலங்கையில் சீன உளவு கப்பல்
இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அதிநவீன சீன உளவு கப்பல், தென்னிந்தியாவில் நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு நிலைகளை எளிதில் கண்காணிக்கும் ராடார்களை கொண்டிருந்தது. இதனால் இந்தியா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி, சீன உளவு கப்பலை இலங்கை அனுமதித்தது. இதனால் இலங்கை மீது இந்தியா கடும் அதிருப்தியை காட்டியது.

ஏவுகணை சோதனை
இந்த பின்னணியில் மேலும் ஒரு உளவு கப்பலை இந்திய பெருங்கடல் பகுதிக்கு சீனா அனுப்பி இருப்பது தெரியவந்துள்ளது. வங்காள விரிகுடாவில் வீலர்ஸ் தீவில் நமது நாடு பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட ஏடி-1 ஏவுகணையும் இத்தீவில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையமான டிஆர்டிஓவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டும் தெரிவித்திருந்தார். அதேபோல் அடுத்த வாரம் மற்றொரு ஏவுகணை சோதனை நடத்தப்பட உள்ளது. இது நவம்பர் 10 அல்லது 11-ந் தேதியன்று நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.

மீண்டும் சீன உளவு கப்பல்
இந்த ஏவுகணை சோதனைகளின் போது இந்திய பெருங்கடலில் சீனாவின் மற்றொரு உளவு கப்பல் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இந்திய கடற்படை படுதீவிரமாக கண்காணித்தும் வருகிறது. அது எந்த பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஏவுகணை சோதனை கண்காணிப்பு?
இது தொடர்பாக National Maritime Foundation இயக்குநர் ஓய்வு பெற்ற வைஸ் அட்மிரல் பிரதீப் சவுகான் கூறியதாவது: இந்தியா ஏவுகணை சோதனை நடத்தும் நேரத்தில் சீன உளவு கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏவுகணை சோதனை எப்படி நடக்கிறது? அதன் பல்வேறு பரிமாணங்கள் என்ன? என்பது குறித்து கண்காணிக்கவே இந்த கப்பல் வந்திருக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications