திக்திக்.. கடத்தல் கப்பலை நெருங்கிய ஐஎன்எஸ் சென்னை! கடற்கொள்ளையர்களுக்கு சென்ற வார்னிங் - பரபரப்பு
டெல்லி: சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். கடத்தப்பட்ட அந்த கப்பல் இருக்கும் இடத்தை இந்திய கப்பற்படையின் ஐஎன்எஸ் சென்னை விரட்டி சென்று நெருங்கி உள்ள நிலையில் விரைவில் மீட்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் இந்திய கப்பற்படை சார்பில் கடற்கொள்ளையர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோமாலியா கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் என்பது அதிகமாக இருக்கிறது. கடற்கொள்ளையர்களின் அச்சத்துக்கு நடுவே தான் தற்போது வரை சரக்கு கப்பல்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக கடற்கொள்ளையர்கள் நடமாடும் பகுதியில் செல்லும்போது கடற்கொள்ளையர்கள் கப்பலில் நுழைவதை தடுக்கும் வகையில் முள்வேலிகள் சுற்றப்பட்டு இருக்கும்.

இருப்பினும் அத்தகைய தடுப்பு வேலிகளையும் தகர்த்து கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்தி செல்வது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சோமாலியா கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பல் ஒன்றை கடத்தி சென்றுள்ளனர்.
லிபேரியா நாட்டு கொடியுடன் எம்பி லிலா நோர்போக் என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு கப்பலில் இந்தியாவை சேர்ந்த 15 மாலுமிகள் பணியில் இருந்தனர். இந்த சரக்கு கப்பல் சோமாலியாவுக்கு கிழக்கே 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அந்த கப்பலுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து கப்பல் கேப்டன் சார்பில் உடனடியாக இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் அந்த பகுதியை நோக்கி திருப்பி விடப்பட்டது. மேலும் இந்திய கப்பற்படையின் ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்தன.
இதற்கிடையே தான் அந்த சரக்கு கப்பலில் நுழைந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் என்பதும், அவர்கள் கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட பணியாளர்களை சிறைபிடித்து அந்த கப்பலை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இந்நிலையில் தான் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்கும் வகையில் கடற்கொள்ளையர்களை நெருங்கி உள்ளது.
தற்போது சோமலியா கடல் பகுதியில் ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் சென்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது வரை கப்பலில் உள்ள இந்தியாவின் 15 மாலுமிகள் உள்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கப்பற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடத்தப்பட்ட கப்பலை மீட்புக்கான நடவடிக்கை என்பது தொடங்கி உள்ளது.
அதன்படி கப்பற்படை கப்பலில் இருக்கும் வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பயணித்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது கடத்தப்பட்ட கப்பலை விட்டுவிட்டு சென்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் கப்பல் மீட்புக்கான ஆபரேஷனை தொடங்குவோம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications