பாகிஸ்தான் ஏவுகணையெல்லாம் சிதைந்துவிடும்.. ஐஎன்ஏ சூரத்தின் வீடியோவை பாருங்க.. கதறவிடும் இந்தியா!
டெல்லி: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் கராச்சியில் 2 நாள் ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ளது. இந்த ஏவுகணை சோதனை என்பது இந்தியாவை மிரட்டும் வகையில் பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இந்திய கடற்படை ஐஎன்எஸ் சூரத் கப்பலை வைத்து சம்பவம் செய்யும் வீடியோவை வெளியிட்டு பாகிஸ்தானை கதறவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. நம் நாட்டுக்கும் பயங்கரவாதிகளை வைத்து குடைச்சல் கொடுக்கும் வேலையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு சென்ற பயங்கரவாதிகள் அங்குள்ள சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

மொத்தம் 26 பேர் பலியான நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்' என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பினாமி அமைப்பாகும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது சமீபகாலமாக குறைந்து வந்தது. இந்த தாக்குதல் காரணமாக இப்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அதேபோல் பிரதமர் மோடியும் இன்று பீகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‛‛பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதை ஒழிப்போம். நம் ஆன்மா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைத்து பார்க்காத தண்டனை வழங்கப்படும்'' என்று முழங்கினார்.
இதனால் பாகிஸ்தானுக்கு நம் நாடு நிச்சயம் பதிலடி கொடுக்கும். இதற்கு தயாராக முப்படைகளும் உஷாராக்கப்பட்டுள்ளன. இதனால் பயந்துபோன பாகிஸ்தான் திடீரென்று ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ளது. கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் இன்றும், நாளையும் ஏவுகணை சோதனை நடத்துவதாக அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடியாக தான் தற்போது நம் நாட்டின் கடற்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் சூரத்தில் கடலுக்கு நடுவே நிற்கிறது. அதில் இருந்து ஏவுகணை வானில் சீறிப்பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்குகிறது. எதிரி நாட்டின் ஏவுகணையை துல்லியமாக அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சோதனையை Sea Skimming target என்று கூறுகின்றனர். இந்த சோதனை இப்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
https://x.com/indiannavy/status/1915323039321059393?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1915323039321059393%7Ctwgr%5Ed41139a9e4411ee876218d076f7ac348aaf61e47%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.business-standard.com%2Fexternal-affairs-defence-security%2Fnews%2Findian-navy-ins-surat-missile-test-pahalgam-attack-125042400636_1.htmlநம் நாட்டை பொறுத்தவரை ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் என்பது பி15பி எனும் வழிக்காட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டுக்கு கடந்த ஜனவரியில் அர்ப்பணிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் 4வது மற்றும் இறுதி போர்க்கப்பல் இதுவாகும். இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதி கொண்ட கப்பல்களில் ஒன்றாக உள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த போர்க்கப்பலின் பணி என்பது எதிரிகளின் ஏவுகணையை அழிப்பதாகும். தற்போது ஐஎன்எஸ் சூரத்தின் சக்சஸ்ஃபுல் வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
