அடுத்த வல்லரசு.. உலகின் பெரிய அண்ணனாகும் இந்தியா.. சீனாவுக்கு விழும் அடி! பிரபலம் சொன்ன குட்நியூஸ்
டெல்லி: ‛‛இந்த 21ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது. இன்னும் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக யார் இருந்தாலும் அவர் தான் உலகின் தலைவராக இருப்பார். இந்தியா புதிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாறும். சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்தை தடுக்க இந்தியா முக்கியமான நாடாகஉள்ளது. உண்மையில் இந்தியா வளர்ந்து வருகிறது. இதனால் நிச்சயம் உலக அரங்கில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா இருக்க முடியும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனில் அபோட் கணித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சியை சேர்ந்த இவர் இந்தியாவின் செயல்பாடு பற்றி விளக்கி உள்ளார். இதுபற்றி டோனி அபோட் கூறியதாவது:

இந்த 21ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது. இன்னும் 40 முதல் 50 ஆண்டுகளுக்கு பிறகு யார் இந்தியாவின் பிரதமராக இருந்தாலும் அவர் தான் உலகின் தலைவராக இருப்பார். அந்த சமயத்தில் உலகின் புதிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். மேலும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் இருக்கும்.
அப்போது ஆஸ்திரேலியாவுடன், இந்தியா வலுவான, நம்பகமான பார்ட்டனராக தொடர வேண்டும். கடந்த 2002ம்ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டது.கடந்த மாதம் ஐக்கியநாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது. இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது சீனாவை விட இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைகிறது.
அதோடு சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்தை தடுக்க இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. ஏனென்றால் சீனா ஆதிக்கம் கொண்ட நாடாக வலம் வர விரும்புகிறது. இது சீனாவின் அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகநாடுகளுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சீனாவுக்கு போட்டியாளாக இந்தியா இப்போது உள்ளது. இருநாடுகளும் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ளது. இப்போது இந்தியாவின் எந்த நகரங்களுக்கு சென்றாலும் புதிய விமான நிலையங்கள் போன்ற வலுவான உள்கட்டமைப்புகள் உள்ளது.
உண்மையில் இந்தியா வளர்ந்து வருகிறது. இதனால் நிச்சயம் உலக அரங்கில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா இருக்க முடியும். நான் மீண்டும் சொல்கிறேன் இந்த 21 ம் நூற்றாண்டு சீனாவுக்கு சொந்தமானது போல் இந்தியாவுக்கும் சொந்தமானது. சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு 3 பெரிய நன்மைகள் உள்ளன.
அது என்னவென்றால் ஒன்று ஜனநாயகம். இன்னொன்று சட்டத்தின் ஆட்சி. மற்றொன்று ஆங்கில மொழி. சில தசாப்தங்களுக்கு முன்பு சீனா சாதித்த பொருளாதார, ராணுவ வளர்ச்சியை இப்போது இந்தியா கையில் எடுத்துள்ளது.
நான் ஏற்கனவே இந்தியா ஒரு ஜனநாயக வல்லரசாக மாறும் என்று கூறியிருந்தேன். அது நடந்து விட்டது. இப்போது நான் இன்னொரு விஷயத்தை கூறுகிறேன். அடுத்த 40-50 ஆண்டுகளில் இந்திய பிரதமர் தான் உலகின் தலைவராக இருக்க வாய்ப்புள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications