மொத்தமாக மாறப்போகுது வந்தே பாரத் ரயில்.. இனி ஈசியாக டிக்கெட் கிடைக்கும்.. ரயில்வேயின் மாஸ் பிளான்
டெல்லி: நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயில் பயணிகளின் ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் ரயில்வே இனிப்பான பிளானை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்துவது ரயில் சேவையைத்தான். இதனால், பயணிகளின் பயண வசதியை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகளை கொண்ட வந்தே பாரத் ரயிலை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது.

வந்தே பாரத் ரயில்: இந்த வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முழுவதும் ஏசி வசதி, சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவு, பயோ கழிப்பறைகள் என விமானத்திற்கு நிகரான வசதிகளுடன் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இந்த ரயிலுக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேரு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தற்போது படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பயணிகள் ஆதங்கம்: இந்த ரயில்களை தொலை தூரங்களுக்கு இயக்க ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை 8 பெட்டிகள் முதல் 16 பெட்டிகள் வரை கொண்டதாக இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் பல வழித்தடங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பது இல்லை என்று பயணிகள் ஆதங்கப்படுவதை காண முடிகிறது.
20 ஆக உயர்த்தப்படும்: இந்த நிலையில், வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாம். எப்போதும் பிசியாக இருக்கும் ரூட்டில் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்படலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. தொலைதூரங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
டிக்கெட் எளிதில் கிடைக்கும்: வந்தே பாரத் ரயில்களில் பெட்டிகளில் கூடுதல் பெட்டிகளை இணைப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும் என்பதோடு பயணிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதில் இருக்கும் சிரமம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வந்தேபாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரிப்பதால் பிற ரயில் சேவை பாதிக்கப்படலாம் என்று பயணிகள் முன்வைக்கும் காரணமாக சொல்லப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications