இதெல்லாம் ஓவர்! ரயிலில் 1000 ரூபாய் உணவுக்கு 660 ரூபாய் ஜிஎஸ்டி.. ஆதாரத்துடன் போட்டோவை பகிர்ந்த பயணி
டெல்லி: ரயிலில் பயணித்த பயணி ஒருவரிடம் 1000 ரூபாய் உணவுக்கு 660 ரூபாய் ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்த படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றனர்
இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு எப்போதும் முதல் சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான்.. விமானத்தில் வேகமாகச் செல்ல முடியும் என்றாலும் காசு அதிகம்.. பேருந்துகளில் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பயணிப்பது கடினம்.

அதேநேரம் ரயிலில் கட்டணமும் குறைவு.. மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர தேவையில்லை. அவ்வப்போது எழுந்து ஒரு குட்டி வாக்கிங் கூடப் போகலாம். மேலும், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் பக்காவாக இருக்கிறது. இதனால் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புவார்கள்.
ரயில்கள்: ஆனால், இந்தியாவில் ரயில்களில் பயணிப்பது என்பது எப்போதும் அனைவருக்கும் சுகமான அனுபவமாக இருப்பதில்லை. ரயில் பயணிகளின் போது நமக்கு என்றே பல பிரச்சினைகள் வரும். குறிப்பாக இந்தியாவில் ரயில்களில் நாம் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்வோம். ஒன்று அங்குள்ள டாய்லெட்கள் சுத்தமாக இருக்காது. அடுத்து உணவு. இந்திய ரயில்களில் உணவு மோசமாகவே தான் இருக்கும். இதைச் சரி செய்ய ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கை எடுத்தாலும் உணவின் தரம் அப்படியே இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் ரயிலில் நல்ல உணவை வாங்கி சாப்பிடுவதே பலருக்கும் சேலஞ்சாகவே இருக்கும். இதற்கிடையே ரயில்வே பயணி ஒருவர் தன்னிடம் இருந்து அதிக தொகை ஜிஎஸ்டியாக வசூலிக்கப்பட்டதாகப் புகார் சொல்லியுள்ளார். அதிகம் என்றால் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இல்லை.. பல நூறு ரூபாய் பொதுவாக ஜிஎஸ்டி என்பது உணவுகளுக்கு 5% தான் வசூலிக்கப்படும்.

66% ஜிஎஸ்டி: இந்தியாவில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரியே 66% தான்.. ஆனால், இந்த நபருக்கு 66% தொகையை ஜிஎஸ்டியாக வசூலித்துள்ளனர். இது குறித்து அவர் தனது ட்விட்டரிலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி ஆகியோரை டேக் செய்து புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது பில்லையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மொத்தம் 9 சைவ மீல்ஸை ஆர்டர் செய்துள்ளார்.
இதற்கான கட்டணம் 1025 ரூபாயாகும். ஆனால், இதற்கு சிஜிஎஸ்டியாக 330 ரூபாய், அதாவது 33%.. அதேபோல எஸ்ஜிஎஸ்டியாக 330 ரூபாய் என மொத்தம் 660 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக 1620 ரூபாயை வசூலித்துள்ளனர். அந்த பில்லின் படத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். எவ்வளவு பெரிய ஓட்டல் என்றாலும் கூட இப்போது 5% தான் ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள். சர்வீஸ் சார்ஜ் இருந்தாலும் கூட அது 10% தான். ஆனால், ரயில்வே நிர்வாகம் எப்படி 66% ஜிஎஸ்டி வசூலிக்க முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே ரயில்வே சேவா பதில் அளித்துள்ளார். அவரது புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர்கள், கூடுதல் தகவல்களையும் கேட்டிருந்தனர். இதை வைத்து நெட்டிசன்கள் ஐஆர்சிடிசியை கடுமையாகச் சாடி வருகின்றனர். ஐஆர்சிடிசி உணவே மோசமாக இருக்கும் நிலையில், அதற்கு 66% ஜிஎஸ்டியா எனப் பலரும் சாடினர். இன்னும் சிலர் நாம் பில்லை சரி பார்க்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
@IRCTCofficial, @eCateringIRCTC, @RailwaySeva
— SanketShelke (@sanketshelke_) August 11, 2023
PNR- 8405082013
What is happening in the IRCTC FOOD system.
On food we have 66% CGST & IGST.#IRCTC@RailMinIndia need to take a look at this @AshwiniVaishnaw, @PiyushGoyalOffc, @narendramodi , @raosahebdanve, @DrSJaishankar pic.twitter.com/rsTqUrBCep












Click it and Unblock the Notifications