Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வேக்கு ஜாக்பாட்.. இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. சென்னை - பெங்களூருக்கு புது அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில்ல இந்திய ரயில்வேக்கு ரூ.2,93,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச நிதியாகும். இந்த பட்ஜெட்டில் ஹைதராபாத் சென்னை மற்றும் சென்னை பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஏனென்றால் ரயில்வே துறைக்கு நிர்மலா சீதாராமன் மொத்தம் ரூ.2 லட்சத்து 923 ஆயிரத்து 30 கோடியை ஒதுக்கீடு செய்தார். இது ரயில்வே பட்ஜெட்டுக்கான அதிகபட்ச நிதி ஒதுக்கீடாக உள்ளது. கடந்த ஆண்டு ரயில்வே துறைக்கு ரூ.2,78,030 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரூ.2 லட்சத்து 923 ஆயிரத்து 30 கோடி வழங்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் நிதி

புதிய ரயில் வழித்தடங்கள் அமைப்பது, தண்டவாளங்களை அதிகரிப்பது, ரயில் பெட்டிகள் வாங்குவது, சிக்னல்கள் மேம்பாடு, ரயில்வேயை மின்மயமாக்குவது, பயணிகளுக்கான வசதிகளை அதிகரித்தல், ஊழியர்களின் நலனை பாதுகாத்தால் என்று தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு திட்டங்கள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் ஊழியர்களின் மேம்பாடு ஆகியவற்றுக்கும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரட்டை ரயில் பாதைக்கு

தற்போது ரூ.2 லட்சத்து923 ஆயிரத்து 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் புதிய வழித்தடங்கள் அமைப்பதற்கு ரூ.36,721.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டில் ரூ.30,631.50 கோடியாக தான் இருந்தது.

அதேபோல் இரட்டை வழிப்பாதை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.29,026 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.37,750 கோடி வழங்கப்பட்டுள்ளது. அகலப்பாதை பணிக்கு கடந்த ஆண்டு ரூ.4,284 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்தமுறை ரூ.4,600 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தண்டவாள பணி

அதேபோல், ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்களுக்காக கடந்தஆண்டு ரூ.50,007 கோடி வழங்கப்பட்ட நிலையில் இப்போது ரூ.52,108.73 கோடியும், குத்தகை எடுக்கப்பட்ட சொத்துக்களின் மூலதனக் கட்டணத்திற்காக கடந்த ஆண்டு ரூ.28,157 கோடியில் இருந்து ரூ.39,650 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தண்டவாளம் புதுப்பிக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ரூ.25,166 கோடி வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை குறைத்து ரூ.22,853 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.6,500 கோடியிலிருந்து ரூ.7,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மின்மயமாக்கல்

அதேபோல், ரயில்வே மின்மயமாக்கல் திட்டங்களுக்கான நிதி ரூ4,500 கோடியிலிருந்து ரூ.5,000 கோடியாக அதிகரித்துள்ளது. சாலை பாதுகாப்பு - லெவல் கிராசிங்குகளுக்கு ரூ.800 கோடியும், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்கு ரூ.8,225 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான வசதிகளுக்காக ரூ.11,971.82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலனுக்காக ரூ.967.31 கோடியும், பயிற்சி மற்றும் பணியாளர் மேம்பாட்டிற்காக ரூ.488.28 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குட்நியூஸ்

மேலும் இந்த பட்ஜெட்டில் 7 வழித்தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்டி மும்பை - புனே, புனே - ஹைதராபாத், ஹைதரபாத் - பெங்களூர், ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூர், டெல்லி - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி இடையே அதிவிரைவு ரயில் பாதை அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால் இந்த ரயில் பாதை புல்லட் ரயிலுக்கானதா? என்பதை அவர் விளக்கவில்லை.

நம் நாட்டில் முதல் புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத் - மும்பை இடையே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து 2027 ல் புல்லட் ரயில் சேவையை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் 7 வழித்தடங்களில் அதிவிரைவு ரயில் பாதை எந்த ரயிலுக்கானது என்பதை நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை. இது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+