டெல்லியில் இரவிலும் நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்- இளைஞர் காங்கிரசார் மெழுகுவர்த்தி பேரணி
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் இரவிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் இரவும் பகலுமாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தினர்.
Delhi: Indian Youth Congress carries out a torch rally, in protest against the incidents at Jamia Millia Islamia and Aligarh Muslim University. Congress leader Harish Rawat is also participating in the protest march. #CitizenshipAmendmentAct pic.twitter.com/LIjjr7loya
— ANI (@ANI) December 17, 2019
அதேபோல் இன்று இரவு டெல்லி குருகோவிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்ர். டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
குஜராத்தில் கைது
இதனிடையே மத்திய அரசை விமர்சித்து சுவரொட்டிகள் ஒட்டியதாக குஜராத் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications