இந்தியர்களுக்கு எமனாகும் இதய நோய்! மற்ற நாடுகளை விட 10 ஆண்டுக்கு முன்பாகவே வரும் மரணம்! ஷாக் தகவல்
டெல்லி: சமீப காலமாக இதய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேற்கத்திய நாட்டினரை விட இந்தியர்கள் இதய நோயால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிடுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்திருக்கின்றனர்.
நவீன உலகில் மனிதர்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இதய நோய்கள்தான் இருக்கின்றன. குறிப்பாக கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கரோனரி இதய நோய் (CHD), பக்கவாதம், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்த இதய நோய், புற தமனி நோய் (PAD), பெருநாடி பெருந்தமனி தடிப்பு ஆகியவை 'சிவிடி' என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த 'சிவிடி' பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்கிறார்கள். இந்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 70 வயதிற்குட்பட்டவர்களில் நிகழ்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், சிவிடி பாதிப்பு உயிரிழப்புகளில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பதுதான்.
இந்தியாவில் ஆண்டுதோறும் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 20%க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் ஏறத்தாழ 17% பெண்கள் இந்த சிவிடி பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மற்ற நாட்டு மக்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் 20-50% சிவிடி பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 'சிவிடி' பாதிப்பு உயிரிழப்பானது இந்தியாவில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இதற்கு பல காரணங்களை மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும்
“நோயறிதல் என்பது தாமதமாக இருப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். நெஞ்சு வலி என்பது பலரும் சாதாரண ஒன்றாக நினைத்துக்கொள்கிறார்கள். இது குறித்து பரிசோதனை செய்து பார்த்தால்தான் அது சாதாரண வலியா? இதயம் தொடர்பான நோயின் அறிகுறியாக என்பதை கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் பெண்களுக்கு இதய நோய் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக இருக்கிறது.
எனவே அவர்களால், இதய நோய் தொடர்பான அறிகுறிகளை சரியாக கணிக்க முடியாமல் போய்விடுகிறது. பல நேரங்களில் வித்தியாசமான அறிகுறிகள் தோன்றுகின்றன. எனவே மரணம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதய நோய்களுக்கு அடிப்படையாக மூன்று காரணங்களை சொல்லலாம்.
ஒன்று மரபணு ரீதியான பாதிப்பு. இரண்டாவது உடலில் சேர்ந்திருக்கும் முறையற்ற உணவு பழக்கம் மூலம் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பு, மூன்றாவது உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை, உடல் செயல்பாடுகள் இல்லாதது, போதிய உடற்பயிற்சி இல்லாதது என மூன்று காரணங்கள்தான் இதய பிரச்னைக்கு முக்கியமானதாக இருக்கிறது. வழக்கமான இந்த காரணிகளை விட புகை பிடித்தல், அளவுக்கு அதிகமான மது, போதை பழக்கம் போன்றவையும் இதய பிரச்னைக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
இவற்றை தடுக்க, சீரான உடற்பயிற்சி, உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவை தேவைப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் அவசியம்” என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications