“பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்”.. திமிராகப் பேசிய பாகிஸ்தான் அமைச்சர்!
டெல்லி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் க்திமிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தருவதற்காக பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவே தற்போது மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியா தாக்கினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாங்கள் தற்காப்புக்காக தயார் நிலையிலேயே உள்ளோம். தக்க பதிலடி கொடுப்போம்" என்று பேசியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், இந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு இந்தியாவுக்கு சவால் விடுத்தார். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இஷாக் டார், "இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடியுள்ளது/ மேலும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரம் இருந்தால், தயவுசெய்து அதை எங்களுடனும் உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications