சீனாவுக்கு ஷாக்! இந்தியாவின் அஸ்த்ரா 2 ஏவுகணையால் ஜர்க் ஆகும் டிராகன்! அடி சறுக்குதா!
டெல்லி: எதிரி நாட்டு விமானங்களை நீண்ட தொலைவில் வைத்தே தாக்கி அழிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் அஸ்த்ரா ஏவுகணைகள். அஸ்த்ரா மார்க்-1 ஏவுகணைகள் 80-110 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கி அழிக்கக்கூடியது. இதனை தொடர்ந்து தற்போது உருவாக்கப்பட்டு வரும் அஸ்த்ரா மார்க்-2 ஏவுகணைகள் சீனாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் பயன்படுத்தியது சீன ஏவுகணைகளைதான்.

அட்வான்டேஜஸ்
PL-15 என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை, பஞ்சாப் பகுதியில் வெடிக்காத நிலையில் இந்திய ராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டது. உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று. இந்த ஏவுகணையிலிருந்து போர் விமானங்களால் தப்பிக்கவே முடியாது. ஒலியை விட 5 மடங்கு வேகத்தில், அதாவது, மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் இது பறக்கும். சீன தயாரிப்பான இது 200-300 கி.மீ தொலைவில் உள்ள விமானங்களை தாக்கும் என்றாலும், பாகிஸ்தானுக்கு சீனா விற்ற இந்த ஏவுகணைகள் 145 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை மட்டுமே தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
துல்லியமான தாக்குதல்
இதில் AESA எனும் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிநாட்டு ரேடார் சமிக்ஞைகளை தடுத்து, இலக்கை துல்லியமாக தாக்கும். கண்களுக்கு தெரியாத தூரத்தில் இருக்கும் இலக்குகளையும் இது தாக்கும்.
தப்பிக்கவே முடியாது
முக்கியமான விஷயம், இந்த ஏவுகணையின் என்ஜின்தான். டபுள் பல்ஸ் மோட்டார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஏவுகணையின் பலம். பாதி தூரம் சென்ற பின்னர், இரண்டாவது மோட்டார் இயங்கும். இது ஏவுகணைக்கு அசாத்திய வேகத்தை கொடுக்கிறது. எனவே போர் விமானங்கள் எவ்வளவு வேகமாக திரும்பினாலும் இந்த ஏவுகணையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. போர் விமானங்கள் மட்டுமல்லாது எதிரிகளின் ராணுவ இலக்கை தாக்கவும் இது பயன்படுகிறது.
டெக்னாலஜி
இதில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி இதுவரை நமக்கு தெரியாமல் இருந்த நிலையில், பஞ்சாபில் விழுந்த ஏவுகணையை DRDO ராணுவ அதிகாரிகள் சோதனை செய்திருக்கின்றனர். சோதனையில் சீனாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் தெரிய வந்திருக்கிறது. இந்த ரகசியங்களை தெரிந்துக்கொண்ட இந்திய ராணுவம் தற்போது மேம்பட்ட அஸ்தரா மார்க் 2 ஏவுகணையை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் தயாரிப்பு
இது 120-160 கி.மீ தொலைவில் உள்ள போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும். இதிலும் தற்போது டபுள் பல்ஸ் மோட்டாரும், AESA கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. சீன தொழில்நுட்பத்தை வைத்து, அந்நாட்டுக்கே சவால் விடும் வகையில் தற்போது இந்தியா இந்த ஏவுகணையை உருவாக்கியிருக்கிறது. விரைவில் இதன் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications