டிரம்ப் முகத்தில் கரிப்பூசிய இந்தியா.. 50% வரியை மீறி அமெரிக்கர்கள் செய்த சம்பவம்.. புதிய சாதனை!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரியும். இந்தியாவை வர்த்தக ரீதியாக முடக்கலாம் என்று டிரம்ப் நினைத்தார். ஆனால் இப்போது நடந்து இருக்கும் சம்பவம் வேறு. டிரம்பின் வரியையும் மீறி நவம்பர் மாதத்தில் நம் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 19.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதோடு, அமெரிக்காவிலும் மவுசு குறையாமல் அந்த நாட்டு மக்கள் நம் நாட்டின் பொருட்களை ஆர்வமாக வாங்கி பயன்படுத்தி வருவது தொடர்பான டேட்டோ வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 கட்டங்களாக தலா 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை நம் நாட்டின் மீது விதித்தார். முதற்கட்டமாக அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி 25 சதவீத வரி விதித்தார். அதன்பிறகு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்று 2வது கட்டமாக 25 சதவீத வரியை விதித்தார்.

இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத வரி கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரியும் என்ற அச்சம் ஏற்பட்டது. இது நடக்கும் பட்சத்தில் நம் நாட்டின் வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஏனென்றால் கடந்த 2024 -2025 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 6.46 லட்சம் கோடி (77.5 பில்லியன் டாலர்) அளவுக்கு ஏற்றுமதி நடந்தது. மாறாக அமெரிக்காவிடம் இரந்து நாம் 3.39 லட்சம் கோடி (40.7 பில்லியன் டாலர்) அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்தோம். இதனால் இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தகத்தில் நாம் தான் அதிகம் லாபம் அடைந்தோம். அமெரிக்காவை விடம் நாம் ரூ.3.07 லட்சம் கோடிக்கு (36.08 பில்லியன் டாலர்) அதிகமாக வர்த்தம் செய்து பலனடைந்தோம்.
இதனால் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்த வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே
கடந்த அக்டோபர் மாதம் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியாவின் ஏற்றுமதி 12 சதவீதம் வரை சரிந்து இருந்தது. ஆனால் தற்போது நடந்திருப்பது வேறு. டிரம்பின் வரி விதிப்புக்கு நடுவேயும் கூட நம் நாட்டின் ஏற்றுமதி கிடுகிடுவென அதிகரித்துள்ளது. குறிப்பாக வழக்கத்தை விட அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 19.4 சதவீதம் அதிகரித்து மொத்தம் 38.1 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.2 லட்சம் கோடியாக)உயர்ந்துள்ளது. அதே சமயம், இறக்குமதி 2 சதவீதம் குறைந்து 62.70 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. நம் நாட்டுக்கான இறக்குமதி குறைவது என்பது நல்ல விஷயம். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை 24.60 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்துக்கு பிறகு சரிந்த மிக குறைந்த அளவாகும்.
மேலும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். இது 22.6 சதவீத அதிகரிப்பைக் காட்டும் வகையில் உள்ளது. மேலும் அமெரிக்கர்கள் தொடர்ந்து நம் நாட்டின் பொருட்களை விரும்பி வாங்குவதை தான் இது காட்டுகிறது. மாறாக அமெரிக்காவிடம் இருந்து நம் நாடு 5.25 பில்லியன் டாலர் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.
அதோடு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த ஏற்றுமதி செயல்திறனை இந்தியா பதிவு செய்துள்ளது. நவம்பர் மாத ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்ததற்கு சீனாவும் முக்கிய காரணமாகும். நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு டிரம்பின் வரி விதிப்பால் சீராகி வருகிறது.
இதனால் சீனாவும் நம் நாட்டிடம் இருந்து கணிசமான பொருட்களை வாங்கியது. நவம்பர் மாதத்தில் சீனா நம்மிடம் இருந்து 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளது. இது 90 சதவீத வளர்ச்சியாகும். இந்த அதிக கொள்முதல் காரணமாக நெதர்லாந்தை பின்னுக்கு தள்ளி சீனா நம் நாட்டின் 3வது பெரிய ஏற்றுமதி நாடாக வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவுகள் வலுப்பெற்று வருவது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது.
-
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல












Click it and Unblock the Notifications