தீவிரவாத தாக்குதல்.. இனி போராக கருதப்படும்! கேட்டுச்சா? பாகிஸ்தானுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் உரசல்கள் போராக வெடிக்க இருந்த நிலையில், இந்தியா முக்கியமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இனி இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் முக்கியமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த ஆபரேஷனை தங்களுக்கு எதிரானதாக கருதிக்கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். அதேபோல ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும் ட்ரோன் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இருப்பினும் ஏவுகணைகளை கொண்டு பாக். தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இந்திய எல்லையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் அதிரடியில் இறங்கியது. பாகிஸ்தானின் ராணுவ விமான தளங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டின் ராணுவ நிலை தகர்க்கப்பட்டது. அதே நேரம் அந்நாடு நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இப்படி இந்தியா கொடுத்த ஒவ்வொரு அடியும் இடிபோல பாகிஸ்தானை தாக்கியது.
இதே நிலை நீடித்தால் அடுத்த ஓரிரு நாட்களில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் முற்றிலுமாக அழித்திருக்கும். இருப்பினும் இரண்டும் அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் நாடுகளாகும். எனவே பொறுப்பை உணர்ந்து இந்தியா சமாதானத்திற்கு வந்திருக்கிறது. அதாவது இனி இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அது போராக கருதப்படும் என்றும், போருக்கு கொடுக்கும் பதிலடியை தீவிரவாத தாக்குதலுக்கு கொடுப்போம் என்றும் மத்திய அரசு நிலைபாடு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பாகிஸ்தானுக்கு சாத்தியமில்லாத விஷயம். தீவிரவாதிகளின் ஊற்று அங்குதான் இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களும் பாகிஸ்தானில்தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. அங்கு பயிற்சி பெற்றவர்கள்தான் இந்தியாவில் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். எனவே இனியும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் முயன்றால் அந்நாட்டுக்கு இந்தியா இப்போது கொடுத்த பதிலடிதான் நினைவுக்கு வரும்.
இதை கவனத்தில் கொண்டு அந்நாடு தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும். அதை செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications