கிணற்றை காணோம் கதை! பாலத்தை அபேஸ் செய்த திருடர்கள்! தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஊர் மக்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தல் நீண்ட காலமாக கைவிடப்பட்ட 60 அடி பாலம் ஒன்றை திருடர்கள் ஸ்கெட்ச் போட்டு பக்காவாக அபேஸ் செய்திருக்கிறாரகள். கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருந்தாலும், இந்தியாவின் பெரிதும் கவனம் பெற்ற கொள்ளை சம்பவங்களில் இது முதலிடத்தில் இருக்கிறது.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. பாலம் அமைந்திருக்கும் கிராமத்திற்கு வந்த கொள்ளையர்கள் தங்களை நீர்வளத்துறை அதிகாரி என்று ஊர் மக்களிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 1972ம் ஆண்டு கட்டப்பட்ட 60 அடி நீலமும் 12 அடி உயரமும் கொண்ட பாழடைந்த பாலத்தை புதுப்பிக்க வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். ஊர் மக்களும் இதை நம்பியிருக்கிறார்கள். இரவு முழுவதும் ஜேசிபி மூலம் பாலம் இடிக்கும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன.

கேஸ் கட்டர்களை கொண்டு இரும்பு வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. சிமென்ட் கட்டுமானங்களை விட்டுவிட்டு வெட்டி எடுக்கப்பட்ட இரும்பை மட்டும் திருடர்கள் அபேஸ் செய்திருக்கிறார்கள். காலையில் கிராம மக்கள் வந்து பார்த்தபோது, எங்க இங்கிருந்த கிணத்தை காணோம் என்கிற கதையாக, பாலம் காணாமல் போயிருக்கிறது. நடந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் யாரும் உங்கள் ஊருக்கு வரவேயில்லை என அதிகாரிகள் அடித்து கூறியிருக்கிறார்கள். அப்போதுதான் நடந்திருப்பது திருட்டு என்பது மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவின் மிக விநோதமான திருட்டு சம்பவங்களில் இது முதலிடத்தில் இருக்கிறது. இதே போன்று நம்ம பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் செல்போன் டவர் திருடுபோயிருக்கிறது.
சிவமொக்கா மாவட்டத்தில் 2008ல் கிராமப்புற பகுதிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைக்க வேண்டும் என்பதற்காக டவர் ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று காலத்தில் இதனை சரியாக மெயின்டெயின் செய்ய முடியவில்லை. கடைசியாக 2023ல் செல்போன் நிறுவனத்தின் மேனஜர் டவரை நேரில் பார்க்க வந்திருக்கிறார். அங்கு டவர் இல்லை. மொத்தமாக டவர் திருடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.46.30 லட்சமாகும்.
கொள்ளையர்கள் எப்படி இதை திருடினார்கள்? திருட எந்த வாகனங்களை பயன்படுத்தினார்கள் என்று எதுவும் தெரியவில்லை. 2019-2022க்கு இடையில் இந்த திருட்டு நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. என்னதான் திருடனாக இருந்தாலும் திருட்டில் ஒரு நியாயம் வேண்டாமா? சிக்னல் வழங்கும் டவரையா திருடுவது? என்று உங்களுக்கு கேட்க தொன்றலாம். ஆனால் அடுத்த திருட்டு சம்பவம் இதை படு பயங்கரமாக இருக்கும்.
கடந்த 2022ம் ஆண்டு பீகார் போலீசுக்கு புகார் ஒன்று வந்தது. அதில் ரயில் என்ஜின் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பெரிய என்ஜினை எப்படிங்க திருட முடியும் என்று கேட்கிறீர்களா?
அதாவது என்ஜின் ரிப்பேருக்காக யார்டுக்கு வந்திருக்கிறது. யார்டில் பணியாற்றியவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு சுரங்கத்தை தோண்டியிருக்கிறார்கள். அதன் மூலம் என்ஜின் பாகம், பாகமாக பிரிக்கப்பட்டு திருடப்பட்டிருக்கிறது. அருகில் இருந்த இரும்பு கடைகளில் சோதனை நடத்தியபோது, என்ஜின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இதெல்லாம் ஓரிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக இருந்தாலும் கூட, இன்றும் இந்தியாவின் விநோதமான திருட்டு சம்பவங்கள் என்றால் இவைத்தான் நினைவுக்கு வருகின்றன.












Click it and Unblock the Notifications