Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகம் முழுதும் முடங்கிய விமான சேவை.. சாப்ட்வேர் பிரச்சனையால் இண்டிகோ - ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர்பஸ் ஏ 320 ரக விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகம் முழுவதும் 6 ஆயிரம் விமானங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட உள்ளது. முதற்கட்டமாக நம் நாட்டில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த 250 விமானங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் மொத்தம் 560 ஏ 320 ரக விமானங்களை இயக்கி வரும் நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விமான பயணம் செய்வோர் அதுபற்றி முன்கூட்டியே அறிந்து கொண்டு பயணிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் (Airbus)... இது ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகம் முழுவது் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

indigo air india air bus

இந்த ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு தான் ஏ320 ரக பயணிகள் விமானம். இந்த விமானத்தை நம் நாட்டில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே தான் ஏர்பஸ்சின் ஏ320 ரக பயணிகள் விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதாவது சூரிய கதிர்வீச்சு ஏ320 விமானங்களின் விமான கட்டுப்பாட்டு டேட்டாக்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது விமான பயணத்தை ஆபத்தானதாக மாற்றிவிடும். இதனை தவிர்க்க சாப்ட்வேர் அப்டேட் அல்லது ஹார்ட்வேர் ரிஅலைன்மென்ட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் காரணமாக உலகம் முழுவதும் ஏ320 ரக விமானங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் சேவையை நிறுத்த வேண்டும் என்று ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நம் நாட்டில் ஏ320 ரக பயணிகள் விமானங்களை பயன்படுத்தும் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேவையை நிறுத்தி உள்ளன. நம் நாட்டில் மொத்தம் 560 ஏ320 ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 200 முதல் 250 ஏ320 விமானங்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் மொத்தம் 6,000 விமானங்கள் வரை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛எப்போதும் பாதுகாப்புதான் முதலில் முக்கியம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். உங்களுக்கு உதவ எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எங்கள் வைப்சைட்டில் விமானங்கள் புறப்படும் நேரத்தை சரிபார்த்து கொள்ளுங்கள். உங்கள் பொறுமைக்கும், எங்கள் மீதான நம்பிக்கைக்கும் நன்றி. இவ்வாறு இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஏர் இந்தியா விமான நிறுவனம் பயணங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‛‛ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் எங்கள் விமான சேவைகளில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. விமானக் குழு முழுவதும் இந்த கோளாறு சரி செய்யப்படும் வரை பயணிகளுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் எங்களது வெப்சைட்டில் தங்கள் விமான நிலையைச் சரிபார்த்து, மேலும் உதவிக்கு 011-69329333, 011-69329999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்'' என கூறியுள்ளது.

‛ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' தனது அறிக்கையில், ‛‛ஏர்பஸ் A320 விமானக் குழுவில் மென்பொருள் பிரச்சனையை சரிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை நாங்கள் தொடங்கி உள்ளோம். எங்களின் பெரும்பாலான விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் விமான பயண நேரத்தில் மாற்றம், ரத்து செய்வது உள்ளிட்டவை ஏற்படலாம். இந்த வழிகாட்டுதல் உலகெங்கிலும் உள்ள விமான ஆபரேட்டர்களுக்கு பொருந்தும்'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று விமான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் தங்களின் விமானங்கள் திட்டமிடப்படி இயங்குகிறதா? இல்லாவிட்டால் காலதாமதத்துடன் இயங்குகிறதா? அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+