சீனா - பாகிஸ்தான் இனி காலி.. இந்தியா இறக்கிய ராட்சசன்.. எஸ் 400, அயன்டோமால் கூட தடுக்க முடியாது
டெல்லி: நம்மை சீண்டி வரும் அண்டை நாடுகளாக உள்ள சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்டவற்றுக்கு ‛செக்' வைக்கும் வகையில் நம் நாடு முக்கிய ராட்சசனை களமிறக்கி உள்ளது. அதுதான் ஐஎன்எஸ் தாமர் போர்க்கப்பலாகும். இந்த போர்க்கப்பலில் இருந்து சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை ரேடாரில் சிக்காமல் அனுப்ப முடியும். மேலும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க முடியாது. இதனால் இந்த ஏவுகணையை வைத்து பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவை எளிதாக தாக்க முடியும். இந்த கடற்படை கப்பல் என்பது என்ன? அதில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை எப்படி எதிரிகளை நோக்கி இந்தியா அனுப்பி தாக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக பாகிஸ்தான் உள்ளது. இது நமக்கு பரமஎதிரியாக உள்ளது. பயங்கரவாதிகளை வைத்து மிரட்டி வருகிறது. அதேபோல் வங்கதேசம் தற்போது புதிய எதிரியாக மாறி உள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றது முதல் வங்கதேசம் நமக்கு எதிரியாகி உள்ளது. சீனாவை எடுத்து கொண்டால் அது நம் நாட்டுக்கு சொந்தமான இடங்களை உரிமை கோரி வருகிறது. அதுமட்டுமின்றி எல்லையில் நம் ராணுவ வீரர்களுடன் மோதலையும் சீனா கடைப்பிடித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்தியாவை புறக்கணித்து தெற்காசிய நாடுகளை ஒன்றிணைத்து சார்க் கூட்டமைப்புக்கு பதிலாக புதிய கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் சீனா ஆகியவை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 3 நாடுகளின் பிரதிநிதிகளும் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டுள்ளன. இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இப்படியான சூழலில் தான் சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துக்கு ‛செக்' வைக்கும் வகையில் நம் நாடு புதிய ராட்சசனை களமிறக்கி உள்ளது. அதாவது நம் நாடு நேற்று ‛ஐஎன்எஸ் தமால்' போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்தது. இது ரஷ்யாவின் தயாரிப்பாகும். அதோடு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கடைசி இந்திய போர்க்கப்பல் இதுவாகும். இனி நம் நாடு வெளிநாடுகளிடம் இருந்து போர்க்கப்பல்களை வாங்காது. ஆத்ம நிர்பார் திட்டத்தில் நம் நாட்டிலேய தயாரித்து கொள்ள உள்ளது.
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ‛ஐஎன்எஸ் தமால்' ரஷ்யாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து இந்த போர்க்கப்பல் நம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ‛க்ரிவாக்' வகை போர்க்கப்பலாகும். 125 மீட்டர் நீளம் கொண்ட 3,900 டன் எடை கொண்டது இந்த போர்க்கப்பல். இந்தியா - சீனாவின் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் யாந்தார் கப்பல்துறை சரமியில் இந்த போர்க்கப்பல் கட்டப்ட்டது. புதுமையான ரேடார் மறைவு தொழில்நுட்பம் மற்றும் நவீன ஆயுத அமைப்புடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு கப்பலில் அதிநவீன் ரேடார் சிஸ்டம் உள்ளது. இது நம் நாட்டை நோக்கி வரும் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர்விமானங்களை் உள்ளிட்டவை எளிதாக கண்டறிந்து நம் படைகளை பதிலடி கொடுக்க தூண்டும்.
இந்த போர்க்கப்பலின் சிறப்பு என்வென்றால் இந்தியா - ரஷ்யாவின் தயாரிப்பான பிரமோஸ் சூப்பர் சோனிக் க்ரூஸ் வகை நீண்ட தூர ஏவுகணையை தாங்கி செல்லும். போர்க்கப்பலில் இருந்து இந்த ஏவுகணையை வானை நோக்கி (Sea-to-Air) ஏவி போர்விமானங்களை அழிக்க முடியும். அதேபோல் கப்பலில் இருந்து தரைப்பகுதியில் (Sea-to-Surface) உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த போர்க்கப்பல் மூலம் இந்திய பெருங்கடலில் சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்புக்கு செக் வைக்கப்பட உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் நம் நாட்டால் பிரமோஸ் ஏவுகணையை வைத்து தாக்க முடியும். இதற்கு முன்பு பிரமோஸ் ஏவுகணையை போர்க்கப்பல்களில் இருந்து 290 - 300 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே அனுப்பி எதிரி நாடுகளை தாக்க முடியம்.
ஆனால் தற்போதைய இந்த ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பலில் உள்ள பிரமோஸ் ஏவுகணை என்பது 450-500 கிலோமீட்டர் தூரம் வரை எதிரி நாட்டின் உள்ளே பிரமோஸ் ஏவுகணையை அனுப்ப முடியும். அதுவும் மணிக்கு 3400 கிலோமீட்டர் வேகத்தில் ஏவுகணையை அனுப்ப முடியும். அதுமட்டுமின்றி பிரமோஸ் ஏவுகணை அணுஆயுதத்தை சுமந்து செல்லும் தன்மை கொண்டது. இதனால் கடலில் இருந்தே ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் மூலமாக அணுஆயுதத்தை எதிரி நாட்டுக்கும் போட முடியும்.
இந்த போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை கடல் மேற்பரப்பில் குறைந்த அளவில் அதாவது 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் மட்டுமே பறக்கும். இதனால் இந்த பிரமோஸ் ஏவுகணையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதுதொடர்பான சோதனை அந்தமான் நிகோபர் கடல் பிராந்தியத்தில் சமீபத்தில் சோதிக்கப்பட்டு வெற்றியும் பெற்றது. போர்க்கப்பலில் இருந்து அனுப்பும் ஏவுகணையை அனுப்புவதன் மூலமாக நம் நாடு பயன்படுத்தும் ரஷ்யாவின் எஸ் 400, இஸ்ரேலின் அயன்டோம் உள்ளிட்ட பிற வான்வெளி பாதுகாப்பு அமைப்பால் கூட கண்டுபிடிக்க முடியாது.
உலகில் இந்த வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இவற்றால் கண்டுபிடிக்க முடியாது என்பது நம் நாட்டுக்கு பெரிய பிளஸ் பாயிண்டாகும். ஏனென்றால் பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசத்திடம் நம்மை விட சிறந்த வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஐஎன்எஸ் தமால் மூலமாக பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவுக்கு எதிராக பிரமோஸ் ஏவுகணையை நாம் அனுப்பும்போது அது நிச்சயம் அந்த நாடுகளால் இடைமறிக்க முடியாது. அதோடு பெரும் சேதத்துக்கு உள்ளாகும். இதனால் இந்த ஐஎன்எஸ் தமால் பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்துக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications