6000 ரூபாய் வழங்கும் மத்திய அரசு.. ஒரு கோடி இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு
டெல்லி: அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வாய்ப்பு ரூ. 5000 அல்லது ஒரு மாத இன்டர்ன்ஷிப் அலவன்ஸுடன் ரூ. 6000 ஒரு முறை உதவி தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
அதேபோல், தேசிய தொழில்துறை கேரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 12 தொழில் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. பல மாநிலங்களில் வேலைவாய்ப்பு என்பது கானல் நீராகி வருகிறது. 20000 சம்பளத்தில் வேலை என்றால் லட்சம் பேர் நேர்காணலுக்கு செல்லும் நிலை இருக்கிறது. அதேநேரம் தொழில் திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் மிக குறைவாக இருக்கிறார்கள். திறமையான பணியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் பற்றாக்குறையும் நிலவுகிறது. கட்டுமானத்துறை, மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீசன், டிசைனிங், உணவுத்துறை, வாகனங்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப பணிகளில் திறமையான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் அதற்கு உரிய திறமையை வளர்க்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த சூழலில் தான் மத்திய அரசு தொழில் பழகுநர் பயிற்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்த பட்ஜெட்டில் அதிரடியான திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பு ரூ. 5000 அல்லது ஒரு மாத இன்டர்ன்ஷிப் அலவன்ஸுடன் ரூ. 6000 ஒரு முறை உதவி தொகை வழங்கப்படும். தேசிய தொழில்துறை கேரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 12 தொழில் பூங்காக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அடுத்ததாக வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இபிஎப்ஓவில் பதிவு செய்யப்டும் அனைத்து முறையான துறைகளிலும் பணிபுரியும் முதல் முறையாக பணிபுரிபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் மத்திய அரசால் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
ஒரு மாத சம்பளம், 15,000 ரூபாய் வரை நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்றும் ஒரு மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இந்த தகுதி உடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் 3000 ரூபாய் அரசே செலுத்தும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications