கடைசி பாலில் மும்பை த்ரில் வெற்றி.. நகம் கடித்த ரோகித்.. சத்தமாக கத்திய மனைவி ரித்திகா.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா கொடுத்த ரியாக்சன் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ரோகித் சர்மா, ரித்திகா இடையேயான நடந்த உரையாடல் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தற்போது 16வது சீசனில் விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தமட்டில் ஐபிஎல்லில் தொடக்கம் சரியாக அமைந்தது இல்லை. சீசன் துவக்கத்தில் தொடர்ந்து தோற்கும் மும்பை அணி படிப்படியாக எழுச்சி கண்டு தான் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

IPL 2023: Mumbai Indians defeating Delhi, Rohit Sharma wife Ritika sajdeh screaming and explains on video call

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 2020ல் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியாக அமையவில்லை. இந்நிலையில் தான் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

முதல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனும், 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் மும்பை தோற்றது. நேற்று முன்தினம் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை குவித்திருந்தது. அக்சர் படேல் 25 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் டேவிட் வார்னர் 51 ரன்களும் குவித்திருந்தனர்.

IPL 2023: Mumbai Indians defeating Delhi, Rohit Sharma wife Ritika sajdeh screaming and explains on video call

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரின் இறுதி பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு சீசனில் மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். 25 இன்னிங்ஸ்களில் தடுமாறிய ரோகித் இந்த போட்டியில் 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அவுட்டாகி இருப்பார். இதையடுத்து ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கடைசி பந்து வரை போட்டி சென்றது. இதனால் ரோகித் சர்மா மிகவும் டென்ஷனாக காணப்பட்டார். இறுதியில் போட்டி முடிந்த பிறகு அவர் கூலாக ப்ளேயர் ஆப் தி அவார்ட் பெற்றார். அதன்பிறகு அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தேவிடம் வீடியோ காலில் பேசினார். போட்டி டெல்லியில் நடந்ததால் அவர் நேரில் பார்க்கவரவில்லை.

இந்நிலையில் தான் போட்டியின் இறுதிக்கட்டத்தில் வீட்டில் நடந்தது என்ன? என்பது பற்றி ரித்திகா சஜ்தே, கணவர் ரோகித் சர்மாவிடம் சில விஷயங்களை பகிர்ந்தார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் தற்போது இணையதளங்களில் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் முதலில் ரித்திகா சிரிக்க, ரோகித் சர்மா ஜஸ்ட் பினிஸ்ட் என சிரித்தபடி கூறுகிறார்.

அதற்கு ரித்திகா, ‛வாழ்த்துகள்' என்றார். மேலும், ‛‛ஐபிஎல் கோப்பையை பெற்றால் சமைரா(ரோகித் மகள்) அதிக மகிழ்ச்சியடைவார் என ரித்திகா கூறினார். அதற்கு, ரோகித், ‛‛நம் மகள் சமைரா கோப்பையை பெற்றுக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்று ரோஹித்தின் மனைவி குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரோகித், "என்னுடைய பேட்டிங்கை விட கோப்பையை நினைத்து தான் சமி உற்சாகமாவாரா?'' என கேள்வி எழுப்பினார். மேலும், ‛‛அவளுக்காக நான் நிச்சயமாக கோப்பையை வெல்வேன்'' என தெரிவித்தார்.

IPL 2023: Mumbai Indians defeating Delhi, Rohit Sharma wife Ritika sajdeh screaming and explains on video call

அதோடு, ‛‛எங்கிருந்து மேட்ச் பார்த்தாய்?'' என ரோகித் சர்மா கேட்டார். இதற்கு ரித்திகா, ‛‛நமது அறையில் இருந்து பார்த்தேன். வெற்றி பெற்றவுடன் நான் மிகவும் சத்தமாக கத்தினேன். என் குரல் முற்றிலுமாக போய்விட்டது. இது ஒரு கிரேஸியான(பைத்தியக்கரமான) கேம்'' என தெரிவித்தார். இதை கேட்டு ரோகித் சர்மா சிரித்தார்.

அதன்பிறகு ரித்திகா, ‛‛நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' கேள்வி கேட்டார். இதற்கு ரோகித் சர்மா, ‛‛நன்றாக உணர்கிறேன். கடைசி ஓவரைப் பார்க்க விரும்பாமல் உள்ளே சென்றேன் என் நகங்கள் போய்விட்டன. இந்த 15 வருட ஐபிஎல்லில் நான் பலமுறை இதுபோன்ற சந்தர்ப்பங்களை கடந்து வந்துள்ளேன். இதை நான் நிறைய பார்த்திருக்கிறேன்'' என ரோகித் சர்மா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+