இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி
டெல்லி: ஈரான்- இஸ்ரேல் போரால் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்யை பெட்ரோல் பங்க்குகளில் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
உலகளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, மக்களுக்குத் தடையின்றி மண்ணெண்ணெய் கிடைப்பதை உறுதி செய்ய இந்தத் தற்காலிகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் (PDS SKO), இனி குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளிலும் கிடைக்கும்.
டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் இரண்டு பெட்ரோல் பங்குகள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு பெட்ரோல் பங்க் அதிகபட்சமாக 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இது 60 நாட்கள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டன:
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் கொண்டு செல்வதற்கும், சேமிப்பதற்கும் இருந்த உரிம விதிமுறைகள் 60 நாட்களுக்குத் தளர்த்தப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க்குகளில் விநியோகித்தாலும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ரேஷன் மண்ணெண்ணெயை உங்கள் ஊரில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலமே எளிதாகப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications