வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கட்டாயமாகிறது? தேர்தல் ஆணையம் மார்ச் 18-ல் முக்கிய ஆலோசனை!
டெல்லி: போலி வாக்காளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்பதில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் வரும் 18-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் மிக முக்கியமான ஆலோசனை நடத்த இருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பொறுப்பேற்ற ஞானேஷ் குமார் கடந்த 4-ந் தேதி அனைத்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் வாக்காளர் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஏப்ரல் 30-ந் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமிருந்து பரிந்துரைகளைத் தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள தனிப்பட்ட கடிதத்தில், நிறுவப்பட்ட சட்டத்திற்கு ஏற்ப தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பரஸ்பரம் வசதியான தருணத்தில், கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைதான் தற்போது பெரும் பிரச்சனையாகவும் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. ஆனால் தேர்தல் ஆணையமோ, வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான எண் கொண்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) தொடர்பான பிரச்சினை குறித்த சில சமூக ஊடக பதிவுகள், ஊடக செய்திகளை அறிந்துள்ளது. சில வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், பெயர் விவரங்கள், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டவை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு வாக்காளரும் தங்கள் மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அந்தந்த தொகுதியில் தங்களுக்கான வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். அங்குதான் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வேறு எங்கும் இல்லை.
பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்/தொடர் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குக் காரணம், அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை ஈரோநெட் தளத்திற்கு மாற்றுவதற்கு முன்னர் பரவலாக்கப்பட்ட முறை, கையேடு நடைமுறை ஆகியவை பின்பற்றப்பட்டன. இதன் விளைவாக சில மாநில / யூனியன் பிரதேச தலைமை அதிகாரி அலுவலகங்கள் ஒரே இபிஐசி எண்ணெழுத்து வரிசையைப் பயன்படுத்தின.
இருப்பினும், எந்தவொரு அச்சத்தையும் போக்க, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனித்துவமான இபிஐசி எண்ணை ஒதுக்குவதை உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரே மாதிரியான இபிஐசி எண் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையும் தனித்துவமான எண்ணை ஒதுக்குவதன் மூலம் சரிசெய்யப்படும். இந்த செயல்முறைக்கு உதவ ஈரோநெட் 2.0 (ERONET 2.0) தளம் புதுப்பிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் இத்தகைய போலி வாக்காளர் பிரச்சனை உள்ளிட்டவைகளுக்குத் தீர்வு காணும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக வரும் 18-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான ஆலோசனையை மேற்கொள்ள இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications