"நான் தமிழன்".. 5 மாநிலங்களில் செம அடி! ஓ இதுக்குத்தான் ராகுல் அன்றைக்கு அப்படி சொன்னாரா? பின்னணி
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிரச்சாரம்.. தேர்தல்.. தோல்வி.. ரிப்பீட்டு.. இந்திய அரசியலில் காங்கிரஸ் கடந்த 8 வருடமாக இதைத்தான் மீண்டும் மீண்டும் எதிர்கொண்டு வருகிறது. இரண்டு லோக்சபா தேர்தல் தோல்வி, பல மாநில தேர்தல் தோல்வி, ஆட்சியில் இருந்து கொண்டே கர்நாடகா, புதுச்சேரி, மத்திய பிரதேச ஆட்சியை பறிகொடுத்தது என்று வரிசையாக அக்கட்சி பல தோல்விகளை சந்தித்துவிட்டது.
இப்போது உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூரிலும் காங்கிரஸ் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

சரியும் காங்கிரஸ்
ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சி இப்படி தேர்தல் தோல்விகளை சந்திக்கும் போதெல்லாம் உடனே ஒரு காரிய கமிட்டி கூட்டம் நடக்கும். அந்த கூட்டத்தில் சில அதிரடி முடிவு எடுப்பதற்கான அறிகுறிகள் தெரியும். ஆனால் அதன்பின் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் மீண்டும் அக்கட்சி பழைய நிலைக்கே சென்றுவிடும். கடந்த 8 வருடமாக காங்கிரசில் எந்த அதிரடி மாற்றமும் நடக்காமல் இருப்பதே அக்கட்சியின் தொடர் தோல்விக்கு காரணம். கட்சியின் மூத்த நிர்வாகிகளே தலைமையின் மெத்தனம் காரணமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

வடஇந்தியாவில் காங்கிரஸ் ஆதரவு
அதிலும் வடஇந்தியாவில் காங்கிரஸ் மீதான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது . மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், டெல்லி என இந்தி ஹார்லாண்ட் என்று அழைக்கப்படும் மத்திய மாநிலங்கள். இந்தி பெல்ட் முழுக்க காங்கிரஸ் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தி பெல்ட்டில் மீண்டும் காங்கிரஸ் மீண்டு எழுவது என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்த செல்வாக்கையும் அந்த கட்சி இழந்துள்ளது.

மக்கள் ஆம் ஆத்மி
ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் உள்ளது. ஆனால் அங்கும் கூட காங்கிரஸ் இதே அரசியல் நிலைப்பாட்டை கடைபிடித்தால் செல்வாக்கை இழக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. மேலும் பாஜகவின் எதிர் வாக்குகள் எல்லாம் காங்கிரசுக்கு செல்லாமல் இப்போது ஆம் ஆத்மிக்கும் பிரிந்து செல்ல தொடங்கி உள்ளது. அதாவது பல மாநிலங்களில் மக்கள் பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் என்று பார்க்காமல் ஆம் ஆத்மி என்று பார்க்க தொடங்கி உள்ளனர்.

காங்கிரஸ் மறுபரிசீலனை
பாஜகவிற்கு மதவாதம் உள்ளிட்ட காரணங்களால் வாக்களிக்க விரும்பாதவர்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள், தலித்துகள் ஆகியோரும் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் ஆம் ஆத்மி பக்கம் சென்றுள்ளனர். உத்தரகாண்டில் பாஜக வெல்லவும், காங்கிரஸ் சரியவும் ஆம் ஆத்மி வாக்கை பிரித்தது காரணம். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி நேரடியாக ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸ் செல்வாக்கை இழந்து உள்ளது. மொத்தமாக வடஇந்தியா காங்கிரசை புறக்கணித்துள்ளது. தென்னிந்தியாவிலும் கேரளா தமிழ்நாடு தவிர கர்நாடகா உட்பட மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்துள்ளது.

காங்கிரஸ் வீழ்ச்சி தமிழ்நாடு
காங்கிரஸ் ஓரளவிற்கு நல்ல செல்வாக்கோடு இப்போது இருக்கும் மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். தமிழ்நாடு மட்டுமே லோக்சபா தேர்தல் தொடங்கி அனைத்திலும் காங்கிரசை கொஞ்சம் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது. அதுவும் கூட்டணி இல்லாத பட்சத்தில் சாத்தியமா என்பது சந்தேகமே. இதை கருத்தில் கொண்டே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும்.. நான் தமிழன்.. தமிழ்நாட்டை உங்களால் கனவில் கூட ஆள முடியாது. பாஜகவின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கும் என்று கூறினாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல் சொன்னாரா?
அதாவது வடமாநிலங்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை.. தமிழ்நாடு தனக்கு ஆதரவு தரும் அளவிற்கு வடமாநிலங்கள் தனக்கு ஆதரவு தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டுதான், தன்னை தமிழன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. வடஇந்தியா மொத்தமாக காங்கிரசை புறக்கணித்து வரும் நிலையில் அக்கட்சி உடனடியாக வடஇந்திய மக்களையும் கவரும் வகையில் பணிகளை செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மாநில கட்சி என்ற அளவில் சுருங்கிவிடாமல் காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் மீண்டும் உயிர்த்தெழும் வகையில் பணிகளை செய்ய வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications