டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெயிலில் அலைய முடியாது.. போலி நபரை வைத்து பிரச்சாரம் செய்யும் கவுதம் கம்பீர்.. கடும் விமர்சனம்!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக கட்சிக்காக போலி நபர் ஒருவரை வைத்து பிரச்சாரம் செய்வது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Gautham Gambhir: போலி நபரை வைத்து பிரச்சாரம் செய்யும் கவுதம் கம்பீர்- வீடியோ

    டெல்லி: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக கட்சிக்காக போலி நபர் ஒருவரை வைத்து பிரச்சாரம் செய்வது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கிறார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாக இவர் கூறி இருந்தார்.

    Is he using a body double? Viral photo of Gautam Gambhirs campaign goes viral

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

    இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது இவர் டெல்லியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக கட்சிக்காக போலி நபர் ஒருவரை வைத்து பிரச்சாரம் செய்வது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் காரில் அமர்ந்து இருக்க வேறு ஒரு நபர் இவரை போலவே தொப்பி அணிந்து கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கிறார்.

    அந்த நபர் பார்க்க கொஞ்சம் கவுதம் கம்பீர் போலவே உள்ளார். இதனால் அவரை பிரச்சாரம் செய்ய சொல்லிவிட்டு கவுதம் கம்பீர், கீழே ஹாயாக ஏசியில் காருக்குள் அமர்ந்து இருக்கிறார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான போட்டோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. கம்பீரின் இந்த செயலை பலர் எதிர்த்து கடுமையாக விமர்சித்து உள்ளனர்.

    English summary
    Is he using a body double? Viral photo of Gautam Gambhir's campaign goes viral in twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X