விடைபெறுகிறது ஓலா, ஊபர்? ஜனவரி 1ல் வலம் வரும் பாரத் டாக்சி.. பூஜ்ய கமிஷன் செயலியால் மக்கள் ஹேப்பி
டெல்லி: இன்றைய சூழலில் ஆட்டோ, கார், பைக் போன்ற போக்குவரத்து சேவைகளை ஆன்லைனில் புக்கிங் செய்து, பயணிப்பது மக்களுக்கு எளிதாகிவிட்டது... எனவேதான் நாட்டின் பல நகரங்களில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற ஆப்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். ஆனால், இந்த நிறுவனங்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்தவண்ணம் உளளன.. அதனால்தான் பாதிக்கப்பட்ட டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சூப்பர் முடிவை எடுத்துள்ளார்கள். அது என்ன தெரியுமா?
ஓலா, ஊபர் போன்ற டாக்ஸிகள் பொதுமக்களுக்கு உதவியாகவும், எளிதாகவும் இருந்து வருகின்றன..இதனால் நினைத்த இடத்திற்கு, நினைத்த நேரத்தில் செல்லமுடிகிறது..

ஆனால் பயண தூரத்திற்கென்று, நிரந்தர கட்டணம் எதுவும் இல்லை.. இதன் காரணமாக தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது... இது பயணிகளை அதிகம் பாதிக்க செய்கிறது..
ஓலா, ஊபர் செயலி
அதிலும் மழை நேரத்தில், ஊபர், ஓலா கேட்கும் கட்டணத்தை பலராலும் தர முடிவதில்லை.. ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது ஒது கட்டணம் என்றால், டிரைவர்கள் கூடுதலான கட்டணத்தை கேட்கிறார்கள்.. அப்படி அவர்களுக்கு கட்டணம் கிடைக்காத பட்சத்தில், அந்த புக்கிங்கையே கேன்சல் செய்துவிடுகிறார்கள். சில இடங்களில் பயணிகளுக்கும் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறும் ஏற்படுகிறது.
இதுபோன்ற தனியார் டாக்ஸிகளின் சேவைகளின் அதிகரிப்பால், அதிக கட்டணம், தன்னிச்சையான செயல்பாடுகள் பெருகி வருகின்றன. எனவேதான் இதுபோன்ற கெடுபிடிகளுக்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்காகவே, நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாகவே பாரத் டாக்ஸி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் புக்கிங் - அதிக கமிஷன்
அதாவது, ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் ஆன்லைன் டாக்சி நிறுவனங்கள், டிரைவர்களிடம் ஏகப்பட்ட கமிஷன் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்ததால், இதனால் பாதிக்கப்பட்ட ஆட்டோ, கார் டிரைவர்கள், தங்களுக்கே சொந்தமான கூட்டுறவு நிறுவனமாக புதிய பாரத் டாக்சி சேவையை ஆரம்பித்துள்ளார்கள்.. இந்த செயலி வரும் ஜனவரி 1ம் தேதி டெல்லியில் அறிமுகமாக உள்ளது.
ஆட்டோ, கார் டிரைவர்கள் இணைந்து "சஹாகர் டாக்சி" என்ற கூட்டுறவு நிறுவனத்தை ஆரம்பித்தனர்.. இதில் ஆயிரக்கணக்கான டிரைவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு நிறுவனம்தான் இப்போது "பாரத் டாக்சி" என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
பாரத் டாக்சி - ஜீரோ கமிஷன்
இந்த செயலியின் ஹைலைட் என்னவென்றால், கமிஷன் என்பதே கிடையாது.. அதாவது, டிரைவர்களின் வருமானத்தில் இருந்து எந்த கமிஷனும் பிடித்தம் செய்யப்படாது. டிரைவர்களே இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருப்பதால், அவர்களின் வருமானம் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும் வகையில் இந்த ஆப் டிசைன் செய்யப்பட்டுள்ளது..
பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இதில் வழங்கப்படும்... வெளிப்படையான கட்டண முறை, பயணிக்கும் வாகனத்தை நேரடியாக கண்காணிக்கும் வசதி, 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை, டில்லி காவல் துறையுடன் நேரடி இணைப்பு போன்ற அம்சங்களும் இதில் உள்ளன.
பாரத் டாக்ஸி
டெல்லியில் ஜனவரி 1-ல் இந்த டாக்ஸி அறிமுகமானதுமே, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிப்ரவரி 1ம் தேதி இந்த சேவை தொடங்கப்பட உள்ளது. ,இதற்கு பிறகு அடுத்தடுத்த 20 நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பாரத் டாக்ஸி மட்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், டிரைவர்களின் வருமானம் உயர்வதுடன், பொருளாதார பாதுகாப்பும் கிடைக்கும். பயணிகளுக்கு வெளிப்படையான கட்டண முறை இருப்பதால் கூடுதல் கட்டணம் கேட்கும் பிரச்சனையும் குறையும். 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மூலம் புகார்கள் விரைவாக தீர்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications