அதிரடி காட்டும் மோடி.. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.. இனிமே பண மழைதான்.. ஏன் தெரியுமா?
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வரும் வாரமே அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதற்கு முன்பாக ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை நாளை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இது அகவிலைப்படி உயர்வு தொடர்பான ரேங்கிங் ஆகும். இந்த ரேங்கிங் வைத்து அகவிலைப்படி எந்த அளவிற்கு உயர்த்தப்படும் என்று யுகம் செய்ய முடியும். வரும் 31ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click it and Unblock the Notifications