ஊத்திக்கிச்சி.. டிரம்ப் திட்டம் மொத்தம் வேஸ்ட்! டாலர் மதிப்பு அதள பாதாளத்துக்கு போகுது!
வாஷிங்டன்: உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கரன்சியாக கருதப்பட்ட அமெரிக்க டாலர், தனது பலத்தை இழந்துக்கொண்டே வருகிறது. எனவே மிகவும் பாதுகாப்பான முதலீடு என்கிற அந்தஸ்தை டாலர் விரைவில் இழக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக, உலகளாவிய முதலீட்டாளர்கள் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காலங்களில் டாலரை ஒரு சிறந்த பாதுகாப்புக் கருவியாகக் கருதி வந்தனர். ஆனால் இப்போது அவர்கள் டாலரை நம்புவதை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட தொடங்கியிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

என்ன நடந்தது?
உலகம் முழுதும் உள்ள முதலீட்டாளர்கள், அதாவது நிறைய சொத்துகளை வைத்திருக்கக் கூடிய நபர்கள், சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்படும்போது தங்கள் சொத்துக்களை டாலர்களாக மாற்றுவார்கள். ஏனெனில் டாலர் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பணம். அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே தான் இருக்குமே தவிர, சரியாது என்கிற கருத்து கடந்த பல ஆண்டுகளாகவே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. எனவேதான் சொத்துக்களை டாலர்களாக மாற்றினார்கள்.
அமெரிக்க பொருளாதாரம்
உதாரணமாக அமெரிக்கா முதலீட்டாளர்களை எடுத்துக் கொள்வோம். அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால், முதலீட்டாளர்கள் தங்கள் வசம் உள்ள சொத்துக்களை விற்று அதை டாலர்களாக மாற்றி பதுக்கி வைத்துக் கொள்வார்கள். இப்படி செய்யும்போது டாலரின் தேவை அதிகரிக்கும். டிமாண்ட் அதிகம் இருக்கும் பொருட்களின் விலை தானாகவே உயரும் என்பது விதி. எனவே முதலீட்டாளர்கள் டாலரை பதுக்கும்போது அதன் மதிப்பு அதிகரிக்கும். பிறகு சில ஆண்டுகள் கழித்து பங்கு சந்தை இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் டாலரை முதலீட்டாளர்கள் வெளியில் எடுப்பார்கள்.
பணம் சம்பாதிக்கும் வழி
உழைக்காமலேயே பணம் சம்பாதிக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாக கடந்த காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது டாலரில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பயப்படுகிறார்கள். காரணம் டாலர் மதிப்பு சரிந்துவிட்டது என்பதுதான். அது எப்படிங்க? டாலர் தேவை அதிகமாக இருந்தால், அதன் மதிப்பு உயரும்னு சொன்னீங்க, இப்போ மதிப்பு சரியுதுன்னு சொல்றீங்க? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.
இந்த சந்தேகத்தை விளக்கிக்கொள்ள வேண்டும் எனில், டாலர் எப்படி சரிந்தது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது உலகம் முழுவதும் பொருளாதார நிலைமை மோசம் அடைந்தால், அதிலிருந்து முதலில் மீள்வது அமெரிக்காவாக தான் இருக்கும். எனவேதான் முதலீட்டாளர்களுக்கு டாலரில் லாபம் கிடைத்து வந்தது.
பொருளாதாரமும் டாலரும்
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் காலத்தில் அமெரிக்கா இந்த தொற்று பாதிப்பை சரியாக கையாள தவறிவிட்டது. இதனால் அமெரிக்காவை விட ஆசிய நாடுகள், உதாரணமாக சீனா போன்ற நாடுகள் சீக்கிரமாகவே பொருளாதாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டன. எனவே டாலருக்கு பதில், சீனாவின் கரன்சிக்கு தேவை அதிகரித்தது. இப்போ டிமாண்ட் டாலருக்கு இல்லை. எனவே டாலர் மதிப்பு குறைந்தது. இதனால்தான் முதலீட்டாளர்கள் தற்போது டாலர்களில் முதலீடு செய்ய யோசிக்கிறார்கள்.
சரி கோவிட் காலத்தில் கொஞ்சம் லேட் ஆயிடுச்சி, அதனால என்ன? சீனாவுக்கு அப்புறம் இரண்டாவது நாடாக உடனே பொருளாதாரத்தில் மீண்டு எழுந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமே என பலரும் யோசித்துக்கொண்டிருக்கையில், அமெரிக்கா இப்போது வரை பொருளாதாரத்தில் பழைய நிலைமைக்கு திரும்பாமலேயே இருக்கிறது.
இதனால் கடந்த மார்ச் மாதம் டாலர் மதிப்பு குறைந்ததை முதலீட்டாளர்கள் கண்கூடாகவே பார்த்தனர். அதாவது அமெரிக்கா பங்கு சந்தையில் 80% மூலதனத்தை கொண்டிருக்கும் S&P 500 குறியீடு 20% குறைந்தபோது டாலர் மதிப்பு 8% வீழ்ச்சியடைந்தது. ஆக பங்கு சந்தை வீழ்ந்த போது, டாலரும் அடி வாங்கியது. எனவே இப்போது முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள்.
டாலர் சரிவுக்கு இன்னொரு காரணம், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்காமல் வெறுமென டாலர்களை மட்டும் அதிக அளவில் அமெரிக்க மத்திய வங்கி அச்சடித்ததுதான். இது உபரியை அதிகரித்தது. ஆனால் முதலீடுகள் ஆசிய நாடுகளில் குவிந்தது. இது எல்லாம் சேர்ந்து டாலருக்கு பாடை கட்டி வருகிறது.
-
ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க படை? டிரம்ப் கையில் பெரிய பிளான்.. நீண்டகாலம் சண்டை நடக்க வாய்ப்பு -
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
அப்போ வெனிசுலா.. இப்போது ஈரான்! ஜனநாயகத்தை காப்பதாக சொல்லிக்கொள்ளும் டிரம்ப்! ஆனால் பிளான் வேற!












Click it and Unblock the Notifications