ஆட்டம் காட்டும் கொரோனா BF7! மறுபடியும் செட்டப்பை மாத்தனுமா? வருமா அடுத்த அலை? நிபுணர்கள் சொல்வதென்ன?
டெல்லி : உலகம் முழுவதும் கொரோனா பிஎஃப் 7 வகை ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் மீண்டும் கடந்த அலைகளைப் போல மீண்டும் ஒரு அலை வருமா? லாக்டவுன் போன்றவற்றிற்கு சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பையும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது ஆட்டத்தை காட்டத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றது.

கொரோனா
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஃப் 7 குறித்த அச்சம்
பாதிப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் நிலையில் கர்நாடகா போன்ற மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சுகாதார துறை சார்பிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா பிஎஃப் 7 குறித்த அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

பாதிப்பு இருக்குமா?
ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் அகலவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பிஎஃப் 7 வகை வைரஸ் காரணமாக இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா பாதிப்புகளை ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இது தொடர்பாக டாடா மெடிக்கல் அண்ட் டயாக்னடிஸ் துறை மூத்த நிபுணர் ரவி, இந்தியாவில் பிஎப் 7 வகை வைரஸ் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை மிக தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இரு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வரும் என ஆறுதல் தரும் அறிவிப்பினை கூறியிருக்கிறார்.

என்ன காரணம்?
இந்த வைரஸ் லேசாகவே உருமாறி இருப்பதால் இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலானோருக்கு மிக அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு தடுப்பூசியும் செலுத்தி இருப்பதால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை இந்தியாவைப் பொறுத்தவரை சீனா போன்று பாதிப்பு இருக்க வாய்ப்பு இருக்காது. ஒருவேளை பிஎஃப் 7 வகை வைரஸ் அதிக அளவில் பரவினாலும் 2020 - 21 காலகட்டங்களைப் போல கொரோனா பெருந்தொற்று என அதனை கூற முடியாது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து அதே வேகத்தில் சரிந்து விடும் எனவும் கடந்த காலங்களைப் போல பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications