பாலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைக்கு வலுவான ஆதரவு அளிப்போம்.. ஐநாவில் அறிவித்த இந்தியா.. அதிரடி!
டெல்லி: பாலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 10 நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த மோதல் தீவிரமாகி வருகிறது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸாவில் இருந்து ஹமாஸ் போராளி குழு பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை நடத்த ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்களில் காசா தரப்பில் 130 பேரும், இஸ்ரேல் தரப்பில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.

மோதல்
இந்த நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் குறித்து நேற்று ஐநாவில் திறந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இந்தியா சார்பாக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் டிஎஸ் திருமூர்த்தி கலந்து கொண்டார். இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று அவர் விளக்கம் அளித்தார்.

விளக்கம்
இந்த கூட்டத்தில் பேசிய டிஎஸ் திருமூர்த்தி, ஜெருசலேம், காஸாவில் நடக்கும் மோதல்கள் கவலை அளிக்கின்றன. இந்த மோதல்களை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டு இருக்கின்றன. கடந்த சில நாட்களாக நடடிக்கும் சம்பங்கள் எல்லாம் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலும் உள்ளது.

பாலஸ்தீனம்
பாலஸ்தீனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்தியா எப்போதும் வலுவான ஆதரவு அளிக்கும். அதேபோல் பாலஸ்தீனத்தின் இரண்டு நாட்டு கோரிக்கைக்கு எப்போதும் இந்தியா ஒத்துழைப்பு நல்கும். எந்த விதமான வன்முறையையும், தாக்குதல்களையும் இந்தியா கண்டிக்கிறது. இது போன்ற தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறைக்க வேண்டும்
உடனடி அமைதிதான் தற்போது தேவை. இரண்டு தரப்பும் உடனடியாக தாக்குதல்களை கைவிட்டு உடனடியாக அமைதியை கடைபிடிக்க வேண்டும். இதுவரை இருந்த நிலையை மாற்ற எந்த தரப்பும் முயற்சி செய்ய கூடாது. முக்கியமாக ஜெருசலேமில் அமைதி நிலவ வேண்டும்.

அமைதி
எந்த விதமான கூடுதல் ராணுவ, தாக்குதல் நடவடிக்கைகளையும் இரண்டு தரப்பும் மேற்கொள்ள கூடாது. இரண்டு தரப்புமே உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். நேரடி பேச்சுவார்த்தைகள் செய்யப்படாததும் கூட இது போன்ற மோசமான தாக்குதல்களுக்கு, மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளது, என்று இந்திய பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications