இனி எல்லாமே நாமதான்.. இஸ்ரோவின் புதிய சாதனை! இந்தியாவுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
டெல்லி: பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை இஸ்ரோ இணைக்க உள்ளது. இதனை 'ஸ்பேஸ் டாக்கிங்' (Space docking) என்று சொல்லுவார்கள். ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இதை செய்யும் 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா இதன் மூலம் பெறுகிறது.
ஸ்பேஸ் டாக்கிங் மூலம், இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சி புதிய கட்டத்தை எட்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 'ஸ்பேஸ் டாக்கிங்' அப்படின்னா என்ன? ஏன் அது முக்கியம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு ஒன்இந்தியா தமிழுக்கு மத்திய அரசு மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு.

ஸ்பேஸ் டாக்கிங் என்றால் என்ன?:
"ரயில்ல எப்படி பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்குமோ, அதேபோல விண்வெளியில் ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை இணைப்பதுதான் ஸ்பேஸ் டாக்கிங். ரயிலில் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு நடந்து செல்ல முடிவதை போல, விண்வெளியில் ஸ்பேஸ் டாக்கிங் செய்வதன் மூலம் ஒரு விண்கலத்திலிருந்து இன்னொரு விண்கலத்திற்கு நம்மால் போக முடியும்.
ஆனால் ஸ்பேஸ் டாக்கிங் கொஞ்சம் கஷ்டமான வேலை. பூமியிலிருந்து சில நூறு கி.மீ உயரத்தில் உள்ள இரண்டு பொருட்களை, இங்கு உட்கார்ந்து கொண்டு ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இணைக்க முடியாது. எனவே அதற்காக தனியாக புரோகிராம்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இரண்டு விண்கலன்கள் சரியான நேரம் பார்த்து, துல்லியமாக இணைந்துக்கொள்ளும். அதுபோல பாதுகாகப்பாக கழன்றும் செல்லும்."
ஏன் ஸ்பேஸ் டாக்கிங் முக்கியமானது?
"நாம் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்று, பூமியை சுற்றிவிட்டு மீண்டும் வந்து சேர்கிறோம் என்றால் நமக்கு ஸ்பேஸ் டாக்கிங் தேவைப்படாது. ஆனால் நாம் போகிற ராக்கெட் திடீரென கோளாறு கொடுத்துவிட்டது எனில், நம்மை காப்பாற்ற இன்னொரு ராக்கெட் வரும். இந்த புதிய ராக்கெட்டுக்குள் போக வேண்டும் எனில், அது பழைய கோளாறு கொடுத்த ராக்கெட்டுடன் இணைய வேண்டும். இப்படி இணைக்க ஸ்பேஸ் டாக்கிங் உதவுகிறது. அந்த வகையில் ஸ்பேஸ் டாக்கிங் மிக முக்கியமானதாக இருக்கிறது.
நடைமுறை உதாரணத்தை சொல்ல வேண்டும் எனில், சுனிதா வில்லியம்ஸ் சென்ற ராக்கெட் திடீரென சம்பவம் செய்துவிட்டது. ஆனால் அவர் அதற்கு முன்னரே சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துவிட்டார். இது ஸ்பேஸ் டாக்கிங் மூலமாகத்தான் நடந்தது. ஆக சர்வதேச விண்வெளி மையத்துடன் ராக்கெட்டை இணைக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது."
எதிர்கால திட்டம் என்ன?
"நிலவில் இறங்கி மண் எடுக்கப்பட்டது என்றும் விண்கற்களிலிருந்து கற்கள் எடுத்து வரப்பட்டது என்றும் செய்திகள் வருவதை நாம் பார்த்திருப்போம். இதை செய்ய 2 குட்டி ராக்கெட்கள் தேவை. இதை வைத்து அனுப்பும் அளவுக்கு சைஸில் பெரிய ராக்கெட் ஒன்றும் தேவை. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிடம் இந்த பெரிய ராக்கெட் இருக்கிறது. அதாவது அவர்களிடம் கண்டெய்னர் லாரி இருக்கிறது. ஆனால் நம்மிடம் குட்டி யானைதான் இருக்கிறது. எனவே இரண்டு ராக்கெட்டை ஒன்றாக வைத்து அனுப்ப முடியாது. ஆனால் நம்மால் இரண்டு குட்டி யானைகளை விண்வெளியில் ஒன்றிணைக்க முடியும். இதுதான் ஸ்பேஸ் டாக்கிங்.
இதன் மூலம் இந்தியாவிடம் உள்ள ராக்கெட்டுகளை கொண்டு நிலவில் மண் துகள்களை எடுத்து வருவது போன்ற சாதனைகளை செய்ய முடியும்."
மேம்பட்ட இஸ்ரோவின் தொழில்நுட்பம்:
"மற்ற நாடுகள் ரொம்ப காசு செலவு பண்ணி செய்யுற வேலையை, நாம் கொஞ்ச பணத்தை வைத்துக்கொண்டே சிறப்பாக செய்திருக்கிறோம். உதாரணத்திற்கு விண்கலன்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பல மோட்டார்களை கொண்டு செயல்படுத்தப்படும். ஆனால், இஸ்ரோ ஒரே மோட்டாரை வைத்து இயந்திரத்தை இயக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது" என்று விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
இஸ்ரோவின் ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பம் சாத்தியமாவதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் அமைய வாய்ப்பு இருக்கிறது. இதுதான் நமக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ். அதேபோல குறைந்த செலவில் ஸ்பேஸ் டாக்கிங் செய்வதன் மூலம், விண்வெளி வர்த்தகத்தில் இனி இந்தியாதான் டாப்பாக இருக்கப்போகிறது என்றும் பேச்சுகள் அடிப்பட தொடங்கியுள்ளன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications