பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கவே.. பொதுநல மனு! உச்சநீதிமன்றத்தில் புலம்பிய தேர்தல் ஆணையம்
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பொதுமக்கள் நலனுக்கு கேடு விளைவிக்க கூடியதாக உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையை 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல இணையதளத்தில் 17c பதிவேற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் எஸ்சி சர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
அதாவது, "தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தைக் கிளப்பி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்து கொண்டு இருப்பதால் அது பொதுமக்களிடம் தாக்கம் ஏற்படுத்தி வாக்களிக்க வருவதை குறைத்து விடுகிறது. மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய இத்தகைய மனுக்களே காரணம்.
தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பொதுமக்கள் நலனுக்கு கேடு விளைவிக்க கூடியதாக உள்ளது. கோடிக்கணக்கான நாட்டு மக்கள் வாக்களிக்கின்றனர், இத்தகை மனுக்கள் மக்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சேதப்படுத்துகிறது"
என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.
இதற்கு உச்சநீதிமன்ற பார்கவுன்சில் தலைவர் கபில் சிபில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை உள்ளடக்கிய படிவம்-17ஐ இணையத்தில் பதிவேற்றுவது சட்டப்பூர்வமாக கட்டாயமில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எண்ணப்படும் வாக்குகள் பதிவேற்றப்படும் பட்சத்தில், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை ஏன் பதிவேற்ற முடியாது? இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை எப்படி நம்புவது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
"நாளை ஆறாவது கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் இந்த மனுவை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை" எனக் கூறி வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பிறகு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உட்பட்டு எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வாக்காளர்கள் பட்டியலாக வெளியிடப்பட்டிருக்கும். ஆனால், சில வாக்குச்சாவடிகளில் மொத்த வாக்காளர்களுக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாயுள்ளன. எனவேதான் படிவம் 17சி கொடுக்கப்படுகிறது. இதில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்கிற விவரம் தெரிந்துவிடும். வாக்காளர் படிவம், படிவம் 17சி என இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
முன்னதாக பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மட்டுமல்லாது தேர்தலின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் ஒப்புகை சீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த சீட்டுக்கள் பதிவான வாக்குகளுடன் எண்ணப்படுவதில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம்தான் வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.
இருப்பினும் சில முக்கிய உத்தரவுகளையும் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதாவது வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
விரிவாக சொல்வதெனில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்.
இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அருண்குமார் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications