தமிழ்நாடு நாம நினைச்சது போல இல்லை.. நிலைமையே வேறு.. அமித் ஷா கைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்?
டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தமிழக பாஜக தொடர்பான முக்கியமான உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக பாஜக ஸ்கோர் செய்ய தவறிவிட்டதாக அந்த உள்துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மத்திய உளவுத்துறை சார்பாக எடுக்கப்பட்ட அறிக்கையில், தமிழக பாஜக இதில் சரியாக செயல்படவில்லை. அங்கே உள்ள மக்களே பாஜக நிலைப்பாட்டை ஏற்கவில்லை. பிரச்சனையை மக்களிடம் இவர்கள் சரியாக கொண்டு செல்லவில்லை.

ஆனால் திமுக அவர்களின் நிலைப்பாட்டை கொண்டு சென்றுவிட்டது. மக்கள் திமுகவின் பிரச்சனை நம்புகிறார்கள். ஆனால் பாஜக சொல்வதை பார்த்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காரணம்.. தமிழக பாஜக இதில் துரிதமாக செயல்படவில்லை. திமுக சத்தமின்றி இதில் கேம் ஆகிவிட்டது ஆனால் பாஜக மிஸ் செய்துவிட்டது.. நிலைமை பாஜக நினைச்சது போல இல்லை.. நிலைமையே வேறு மாதிரி இருக்கு என்று உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று அமித் ஷாவின் மேஜைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி அப்செட்
இன்னொரு பக்கம் டெல்லியில் உள்ள பா.ஜ.க தேசியத் தலைவர்களுக்கு தமிழக பாஜக பிரிவு மீது அதிருப்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை மாநில பாஜக கட்சி முறையாகக் கையாளத் தவறியதே இதற்குக் காரணம் எனக் கருதுகின்றனர். இவ்விவகாரம் தமிழக பா.ஜ.கவுக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி இல்லாத போது தமிழக பா.ஜ.கவுக்கு அண்ணாமலை தலைமை தாங்கினார். பின்னர் கூட்டணியை மனதில் வைத்து அண்ணாமலை நீக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார். அண்ணாமலை தலைமைப் பதவியை மீண்டும் பெற முயன்று வருகிறார். திருப்பரங்குன்றம் சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள்.
அண்ணாமலை பேட்டி
கடந்த வெள்ளிக்கிழமை பாஜக சென்னை அலுவலகத்தில் நீண்ட காலத்திற்க்கு பின் ஊடகங்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது. சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, தர்காவுக்கு செல்லும் பாதை ஆகிய 3 இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்புகளை அமைச்சர் ரகுபதி திரித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.
தர்காவில் இருந்து 50 மீட்டரில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என 1ஆம் தேதி ராமரவிக்குமார் கோர்ட்டுக்கு சென்றார். அப்போது மதுரை கிளை நீதிமன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நியாயபடி பார்த்தால் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தர்கா நிர்வாகம்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் விளக்கேற்றினால் எங்கள் மனம் புண்படும் என அவர்கள்தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு கூறியிருக்க வேண்டும். ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். சிக்கந்தர் தர்கா இருப்பதால் சிக்கந்தர் மலை என திமுக அரசு பெயரிட்டு ரசித்தது. சிக்கந்தர் மலை என பெயரிட்டதால் ராமநாதபுரம் எம்பி அங்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது இந்த திமுக அரசும், கோயில் செயல் அலுவலரும் எங்கே போயிருந்தார்கள், என்று அண்ணாமலை பேசி இருந்தார்.
பாஜக அலுவலகம் அண்ணாமலை
பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பேசுவதற்கு பின் அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னலே காரணம் என்கிறார்கள். அதாவது அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் தர டெல்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை அமித் ஷாவிடம் பேசிய சில விஷயங்களே இதற்கு காரணம் என்கிறார்கள். நயினார் நாகேந்திரன் பெரிய போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், பா.ஜ.க மாநில அளவில் தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக் கிடைத்த பெரிய வாய்ப்பை கட்சி இழந்ததாகவும், தாமதமும் குழப்பமும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ராம ரவிக்குமார் குழுவும் இதே விமர்சனத்தை முன்வைக்கிறது.
அண்ணாமலை டெல்லி இது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்பி உள்ளார். அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை இதை பற்றிய ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளார் என்கிறார்கள். அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பலவீனமாகக் கையாண்டது, குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழக பா.ஜ.கவின் இமேஜுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி உள்ளாராம். இதன் காரணமாகவே அமித் ஷா, அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பேசினார்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பில் இருந்தும், அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம், தமிழக தொண்டர்களிடையே குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மத்தியத் தலைமை அண்ணாமலையின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொண்டதன் தெளிவான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.
டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதே நிகழ்வில் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தோன்றினார். இது கட்சியில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான அறிகுறிகள் என்கிறார்கள்.
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications