இரு நாட்கள் பயணமாக இலங்கை செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

இன்று மாலத்தீவுகளுக்கு சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் நேராக அட்டா நகருக்கு செல்கிறார். அங்கு அவர் அதிபர் இப்ராஹிம் முகமது சோளியையும் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்தையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறுகையில் இரு நாடுகளிடையே நட்புறவு, வளர்ச்சி, ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்புடைய பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வேண்டியுள்ளது. மாலத்தீவுகளின் சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் இந்திய ஆதரவு திட்டங்களை தொடங்கி வைக்கவும் செல்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அது போல் அதளபாதாளத்தில் பொருளாதாரம் உள்ள இலங்கைக்கும் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஜெய்சங்கர் செல்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிஎல் பெய்ரிஸ் இந்தியா வந்திருந்தார். அது போல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை நிதித் துறை அமைச்சர் பாசில் ராஜபச்சேவும் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார். அத்துடன் அவர் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கிறார். செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலை உள்ளது. குழந்தைக்கு விற்கப்படும் பால், ரொட்டி, முட்டை உள்ளிட்டவை விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications